MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் விமர்சனம் கூறிய பிரபலம்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரா?

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் விமர்சனம் கூறிய பிரபலம்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரா?

தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : manimegalai a
Published : Feb 10 2025, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எப்படி இருக்கு:

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எப்படி இருக்கு:

நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உள்ளார். இரண்டு முறை தேசிய விருதை வாங்கி உள்ள தனுஷ், கடந்த சில வருடங்களாகவே திரைப்படம் நடிப்பதை தாண்டி இயக்கத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடித்து - இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
 

25
பா.பாண்டி படத்தில் தனுஷின் இயக்கம்

பா.பாண்டி படத்தில் தனுஷின் இயக்கம்

இந்த படத்தை பார்த்த, சூப்பர் ஸ்டாரும், முன்னாள் மாமனாருமான ரஜினிகாந்த் கூட மெய் சிலிர்த்து பாராட்டி இருந்தார்.  இப்படி ஒரு சிறப்பான படைப்பு தனுஷ் வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ் என ரஜினிகாந்த் அப்போது கூறியது தனுஷின் வெற்றிக்கு மகுடமாகவே பார்க்கப்பட்டது . அதேபோல் இயக்குனராக மட்டும் இன்றி, பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையாளராக இருக்கும் தனுஷ்... கடந்த ஆண்டு தன்னுடைய 50-ஆவது திரைப்படமான, ராயன் படத்தை இயக்கி நடித்தார்.

இந்த ஆண்டில் இதுவே முதல் முறை; 'விடாமுயற்சி' செய்த சாதனை கொண்டாடும் ரசிகர்கள்!

35
நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் நடிகர்கள்:

நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் நடிகர்கள்:

வசூல் ரீதியாகவும் - விமர்சன ரீதியாகவும் தனுஷுக்கு வெற்றியை கொடுத்தது இந்த படம். இந்த படத்தை இயக்கி முடித்த கையோடு, தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து தனுஷ் தன்னுடைய 3-ஆவது படமான, 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'  என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். காதலர் தின ஸ்பெஷலாக இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க, பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ்,  ரம்யா ரங்கநாதன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்துள்ளது.

45
பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றம்:

பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றம்:

பிரியங்கா மோகன், கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு ஸ்பெஷல் அப்பியரன்ஸாக வந்து ஆட்டம் போட்டு உள்ள நிலையில், தனுஷும் காதல் ஃபெயில் என்கிற பாடலில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார். டீன் ஏஜ் பருவ மாணவர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, கலைப்புலி தாணு வி கிரியேஷன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

பிக் பாஸ் ஷிவானியா இது! பிளாஷ்டிக் சர்ஜரியால் பறிபோன அழகு?

55
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்:

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்:

இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இப்படத்தின் விமர்சனம் குறித்து அவர் கூறுகையில்... "நீண்ட நாட்களுக்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் வழக்கமான ஒரு காதல் கதையை கண்டு ரசித்தேன். ஆனாலும் தனுஷ் உருவாக்கியுள்ள உலகத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் கண்டு உற்சாகமடைந்தேன். இதைக் காணும் அனைவருக்குமே இந்த உற்சாகம் ஏற்படும். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியே காதலின் அப்பாவித்தனத்தில் நிகழ்வது தான்"  என தெரிவித்துள்ளார். வழக்கமான காதல் கதை என கூறியுள்ளதால்... அப்போ புதுசா தனுஷ் எதுவும் இந்த படத்துல மெசேஜ் கொடுக்கலையா? பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்களே...  என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Recommended image2
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image3
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved