இந்த ஆண்டில் இதுவே முதல் முறை; 'விடாமுயற்சி' செய்த சாதனை கொண்டாடும் ரசிகர்கள்!
அஜித் நடிப்பில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்று வரும் 'விடாமுயற்சி' நான்கே நாட்களில் புதிய வசூல் சாதனை படைத்துளள்ளது.

விக்னேஷ் சிவன் தவறவிட்ட அஜித் பட வாய்ப்பு:
நடிகர் அஜித்தை வைத்து, வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது. இந்த வாய்ப்பு இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தும், அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறவிட்டார்.
அஜித்தின் 62 ஆவது பட வாய்ப்பு, முதல் முதலில் விக்னேஷ் சிவனுக்கு தான் கிடைத்தது. இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாகவும் வெளியிட்டது. விக்னேஷ் சிவன் கூறிய ஒன் லைன் அஜித்துக்கு பிடித்திருந்தாலும், ஒட்டுமொத்த கதையையும் கேட்டபோது அஜித்துக்கு திருப்திகரமாக இல்லை. லைக்கா நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்க தயக்கம் காட்டியது. பின்னர் பலமுறை கதையில் விக்னேஷ் சிவன் ரீ-ஒர்க் செய்த போதும், அஜித்துக்கு பிடிக்காத காரணத்தால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்தது. விக்னேஷ் சிவனுக்காக நடிகை நயன்தாரா இறங்கி வந்து அஜித்திடம் பேசியும் அஜித் லைகா முடிவுக்கு நான் எதுவும் பண்ண முடியாது என கைவிரித்தார்.
விக்னேஷ் சிவன் தவறவிட்ட அஜித் பட வாய்ப்பு:
அஜித் தன்னுடைய திரைப்படத்தில், மாஸ் காட்சியை தாண்டி ஏதேனும் ஒரு கருத்து இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார். அது போல் எந்த ஒரு கருத்தும் இல்லாததே இந்த படத்தை அஜித் ரிஜெக்ட் செய்ய காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் இயக்குனர் மகிழ் திருமேனி, கிட்டத்தட்ட ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு முக்கிய கருத்தை மையப்படுத்தி உருவாக உள்ள, விடாமுயற்சி படத்தின் கதையை அஜித்திடம் கூறியுள்ளார். கதையை கேட்டதுமே அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டது. எனவே உடனடியாக இதுகுறித்து லைக்கா நிறுவனத்திற்கு தெரிவிக்க, அஜித்தின் 62 ஆவது படமான விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்குவது உறுதி செய்யப்பட்டது.
புஷ்பா 2 படத்தின் கேரளா தோல்விக்கு என்ன காரணம்? விளக்கம் கொடுத்த விநியோகஸ்தர்!
டிசம்பர் மாதம் நிறைவடைந்த படப்பிடிப்பு:
கடந்த 2023 அக்டோபர் மாதம் அஜர் பைஜானில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், பல பிரச்சனைகள் காரணமாக படத்தை இயக்கி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டத. பின்னர் அஜித்தின் ரொமான்டிக் பாடலோடு கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்த நிலையில், இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட மாற்றம்:
ஆனால் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருந்ததால், இந்த படத்தின் ரிலீசில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வேறு தேதிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக இருந்த விடாமுயற்சி பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தொடர்ந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ராகவா லாரன்ஸ்; ஜோடி யார் தெரியுமா?
விடாமுயற்சி வசூல் நிலவரம்:
விடுமுறை இல்லாத நாட்களில் விடாமுயற்சி வெளியானதால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான வசூலை ஈட்டியது. அதன்படி ரூ. 25.5 கோடி வசூலித்தலதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளும் வசூலில் டல்லடித்த விடாமுயற்சி மூன்றாவது நாளில், கொஞ்சம் வசூரில் பிக்கப் ஆகிய ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. இந்திய அளவில் மூன்றே நாட்களில் இப்படம் இந்திய அளவில் ரூ. ரூ.50 கோடியும் ஓவர்சீஸ் ரூ.22 கோடியும் வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில், நான்காவது நாள் வசூல் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
4 நாட்களில் 100 கோடி வசூல்:
அதன்படிம், இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டி விட்டதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது, அதன்படி இந்த 2025-ல் உலக அளவில் இதுவரை ரூ.100 கோடி மேல் வசூல் செய்த திரைப்படம் என்கிற புதிய சாதனையை 'விடாமுயற்சி' திரைப்படம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இன்று லைக்கா நிறுவனம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் திரைப்பட நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.