- Home
- Cinema
- சூர்யா ஸ்டைலில் காதலை சொன்ன போது கண்விழித்த ரேவதி; ஆனந்த கண்ணீர் வடித்த கார்த்திக் - கார்த்திகை தீபம் 2
சூர்யா ஸ்டைலில் காதலை சொன்ன போது கண்விழித்த ரேவதி; ஆனந்த கண்ணீர் வடித்த கார்த்திக் - கார்த்திகை தீபம் 2
Karthik Love Propose to Revathi : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ஆபரேஷன் முடிந்து கண்விழிக்காமல் இருக்கும் ரேவதியிடம் தன் காதலை சொன்ன கார்த்திக் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2
கார்த்திகை தீபம் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ரேவதி மற்றும் கார்த்திக்கின் காதல் காட்சிகள் தான் ரசிகர்களுக்கு ரொம்பவே பேவரைட். என்னதான் கார்த்திக்கை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், அதன் பிறகு கார்த்திக் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொண்டு அவரை காதலிக்க ஆரம்பித்தார் ரேவதி. ஆனால், கார்த்திக் அவரை காதலிக்காதது போன்று நடித்தார். உண்மையில் ரேவதியை கார்த்திக்கிற்கு பிடிக்கும்.
கார்த்திக் அண்ட் ரேவதி காதல் காட்சிகள்
ஒரு கட்டத்தில் கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அவரது மனைவி இறந்துவிட்டதும் தெரிந்து ரொம்பவே மனமுடைந்து போனார். அதன் பிறகு உண்மை தெரிந்து மீண்டும் கார்த்திக்கை முன்பை விட அதிகளவில் நேசிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க கூடாது என்பதற்காக போலீஸ் காவலில் இருந்து தப்பித்து வந்து ரேவதியை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் மாயா துப்பாக்கியால் சுட்டார். இதில், மயங்கி விழுந்த அவரை கார்த்திக் மருத்துவமனையில் சேர்த்தார்.
மருத்துவமனையில் ரேவதி
ஆனால், அவருக்கு அதிக ரத்தம் தேவைப்பட, ரோகிணியின் தோழி வர, அவர் கடத்தப்பட, பிறகு அவரை காப்பாற்ற இப்படி பல சம்பவங்களுக்கு பிறகு ரேவதிக்கு மாரி ரத்தம் கொடுத்தார். அவர் கொடுத்த ரத்தத்தை ரேவதிக்கு செலுத்தி ஆபரேஷ் செய்யும் போது கூட மாயா பவர்கட் செய்து ஆபரேஷனை நிறுத்த பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. எப்படியோ கார்த்திக் ஜெனரேட்டர் கொண்டு வர ஆபரேஷனும் நல்லபடியாக நடந்து முடிந்தது.
'சிறகடிக்க ஆசை' சீரியல் ஹீரோ வெற்றியின் லவ் ஸ்டோரி தெரியுமா? வைஷு வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
ரேவதிக்கு அறுவை சிகிச்சை
இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். ஆபரேஷன் முடிந்து கண் விழிக்காமல் இருந்த ரேவதியை அவரது குடும்பத்தினர் பார்த்துவிட்டு வந்தனர். எல்லோரும் பார்த்து அவரிடம் பேசிவிட்டு வந்தனர். கடைசியாக கார்த்திக் பார்த்தார். என்னுடைய மனதில் நீதான் இருக்க, நான் இதை உன்னிடம் சொல்ல காத்துக் கொண்டிருந்தேன்.
மாயா மற்றும் ரேவதி
இப்போ சொல்கிறேன். ஐ லவ் யூ. ரேவதி என்னை பாரு, கண் முழித்து என்னை பாரு என்று கண்ணீர் விட்டு அழுத போது கார்த்திக்கின் கண்ணீர் துளிகள் ரேவதியின் கையில் விழவே, அவர் கண் விழித்தார். ரேவதி கண் விழித்ததை பார்த்த போது கார்த்திக்கிற்கு எல்லையில்லா ஆனந்தம். அதோடு கார்த்திகை தீபம் 2 சீரியலிலின் இன்றைய புரோமோ வீடியோ முடிந்தது.
TTF வாசன் மனைவி முகத்தை பாத்திருக்கீங்களா? அவர் இல்லையா இவர்? வெளியானது படம்!