- Home
- Cinema
- 'சிறகடிக்க ஆசை' சீரியல் ஹீரோ வெற்றியின் லவ் ஸ்டோரி தெரியுமா? வைஷு வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
'சிறகடிக்க ஆசை' சீரியல் ஹீரோ வெற்றியின் லவ் ஸ்டோரி தெரியுமா? வைஷு வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
Vetri Vasanth And Vaishu Love Story: 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வரும் வெற்றி வசத்தின் மனைவியும் நடிகையுமான வைஷ்ணவி, தங்களின் காதல் கதை மற்றும் தன்னுடைய வாழ்க்கையில் நேர்ந்த, மோசமான சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்:
சீரியலில் ஒன்றாக இணைந்து நடிக்கும் சிலர், வாழ்க்கையிலும் இணைவது பலரும் அறிந்தது தான். ஒரு சிலர் இணைந்து நடிக்காத போது கூட, நட்பாக பழகி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான் 'சிறகடிக்க ஆசை' சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் மற்றும் 'பொன்னி' சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் ஜோடி.
விஜய் டிவி சீரியல் நடிகை வைஷ்ணவி:
வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர். இதை தொடர்ந்து, 'பொன்னி' சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதே போல் வெற்றி வசந்த், பல வருடங்களாக சீரியல் வாய்ப்பு தேடி வந்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட ’சிறக்கடிக்க ஆசை’ தொடரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருவரும், சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்த பின்பு, காதலிக்கும் தகவலை வெளியிட்டனர்.
வெற்றி - வைஷு காதல் கதை:
இந்நிலையில் வைஷ்ணவி தன்னுடைய காதல் கதை பற்றியும், வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத சம்பவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது... ”நானும் வெற்றியும் முதலில் மெசேஜ் மூலமாக தான் பேச துவங்கினோம். இவர் விஜய் டிவி சீரியலில் நடிக்க போகிறார் என்கிற தகவல் கூட எனக்கு தெரியாது. 'சிறகடிக்க ஆசை' சீரியலின் புரோமோவை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்தேன். அதன் பின்னர் இருவரும் நன்றாக பேசினோம்.
இரு வீட்டிலும் கிடைத்த சம்மதம்:
பின்னர் இருவரும் நேரில் பார்த்து பேசிய பின்னர்... இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. இருவரும் பழக துவங்கி ஒரு வருடம் ஆன பின்னர் வெற்றி தன்னை மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். உனக்கு பிடித்தால் சொல்லு திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார். அவரின் இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின்னர் காதல் பற்றி பேசி என்னை அவர் தொந்தரவு செய்யவில்லை. பின்னர் ஒரு நாள் என்னிடம், தன்னை பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். என்னுடைய சம்மதம் கிடைத்ததும், முறையாக அவர் வீட்டில் விஷயத்தை கூறி, எங்கள் வீட்டில் பேசினார்கள். அவர்களும் பூரண சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தார்கள் என கூறியுள்ளார்.
வைஷு வாழ்க்கையில் நேர்ந்த சோகம்:
இந்த பேட்டியில், தொடர்ந்து பேசிய வைஷ்ணவி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் துயரமான சம்பவம் பற்றியும் பேசியுள்ளார். அதாவது வைஷ்ணவிக்கு சிறு வயதில் இருந்தே அவரின் தந்தை தான் மிகவும் சிறந்த நண்பராக இருந்தாராம். ஒரு கட்டத்தில் அவருக்கு கேன்சர் என தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்த பின்னர், வாழ்க்கையே இருந்தது போல் உணர்ந்ததாகவும்... மிகவும் போராடி அதில் இருந்து தந்தையை மீட்டு கொண்டுவந்ததாகவும் பேசியுள்ளார்.