TTF வாசன் மனைவி முகத்தை பாத்திருக்கீங்களா? அவர் இல்லையா இவர்? வெளியானது படம்!
TTF Vasan Wife face Revealed: யூடியூபர் டிடிஎப் வாசனுக்கும் அவரின் மாமன் மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்த பின்னரும்... மனைவி முகத்தை யாருக்கும் காட்டாமல் மூடி வைத்திருந்த நிலையில், தற்போது அவரின் முகம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

சர்ச்சையான பிரபலம் TTF வாசன்:
யூடியூப்பில் பலர் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைகிறார்கள். அந்த வகையில், பைக்கில் பல்வேறு சாகசம் செய்து, அதை வீடியோவாக வெளியிட்டு, அதன் மூலம் பிரபலமானார். மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட TTF வாசன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு, பைக்கில் வீலிங் செய்து இவர் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் வரை தடை செய்யப்பட்டது.
ஷாலின் சோயாவுடன் காதல்?
சமீபகாலமாக எந்த ஒரு சர்ச்சியிலும் சிக்காமல் இருந்து வரும் டிடிஎப் வாசன், கடந்த ஆண்டு 'மஞ்சள் வீரன் ' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட் ஆன நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல நடிகை ஷாலின் சோயாவை டிடிஎப் வாசன் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும், நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.
TTF வாசனுக்கு நடந்த அவசர திருமணம்:
பின்னர் இவர்களின் காதல் பிரேக்கப் ஆன நிலையில், இதை தொடர்ந்து டிடிஎப் தன்னுடைய மாமன் மகளையே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. டிடிஎப் வாசனுக்கு, தனது மகளை அவரின் மாமா திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். டிடிஎப் வாசன் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டிருந்தாலும், அதில் தன்னுடைய காதலியின் அடையாளத்தை மறைக்கும் விதமாக முகத்தை மறைந்திருந்தார்.
இது தான் TTF வாசன் மனைவியா?
ஆனால் நெட்டிசன்கள் AI மூலம், டிடிஎப் வாசனின், காதலி முகத்தை கண்டுபிடித்துவிட்டதாக சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம், சமூக வலைத்தளத்தில் டிடிஎப் வாசனின் காதலி புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வைரலாகி வரும் நிலையில்... இது உண்மையிலே அவர் முகம் தானா? இல்லையா என்பது பற்றிய தகவலை கூடிய விரைவில் டிடிஎப் வாசனே உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.