- Home
- Cinema
- நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு சிறைத் தண்டனை... காரைக்குடி நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு - பின்னணி என்ன?
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு சிறைத் தண்டனை... காரைக்குடி நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு - பின்னணி என்ன?
மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷின், மனைவி ஜோதீஸ்வரிக்கு சிறை தண்டைனை விதித்து காரைக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அரசியல்வாதியாகவும் வலம் வந்த இவர் இராமநாதபுரத்தில் இருந்து எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக-வில் பணியாற்றி வந்த ரித்தீஷ், கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். 46 வயதில் ஜே.கே. ரித்தீஷ் மரணமடைந்தது திரையுலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்கிற மனைவி உள்ளார். அவருக்கு தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 41 வயதாகும் ஜோதீஸ்வரி, காரைக்குடியில் நகைத் தொழில் செய்துவரும் திருச்செல்வம் என்பவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளையும் வெள்ளி பொருட்களையும் வாங்கி இருக்கிறார். இதற்கான பணத்தை தராமல் ரூ.20 லட்சத்துக்கான 3 காசோலையை வழங்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பிளஸ் 2-வில் 600க்கு 600 எடுத்த நந்தினியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து தங்கப்பேனா பரிசளித்த வைரமுத்து
இந்த காசோலையை திருச்செல்வம் வங்கியில் செலுத்தியபோது தான் அதில் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து தான் பணத்தை மொத்தமாக தந்துவிடுவதாக கூறி இருக்கிறார் ஜோதீஸ்வரி. சொன்னபடி பணத்தை தராமல் இழுத்தடித்ததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபிரதா, நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு ரூ.60 லட்சம் அபராதமும், 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டார். நடிகரின் மனைவிக்கு காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... கனவுக்கன்னி ஆசையில் இருக்கும் நடிகை அனிகாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்... யார் பார்த்த வேலைடா இது!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.