கனவுக்கன்னி ஆசையில் இருக்கும் நடிகை அனிகாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்... யார் பார்த்த வேலைடா இது!
நடிகை அனிகா சுரேந்திரனின் புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் அறிமுகமான கவுதம் மேனனின் என்னை அறிந்தால் படம், அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்திற்கு பின்னர் விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்த அனிகாவை ரசிகர்கள் செல்லமாக குட்டி நயன் என்று அழைக்கத் தொடங்கினர். பின்னர் ஜெயம் ரவி உடன் மிருதன், விஜய் சேதுபதியின் மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார் அனிகா.
தற்போது 18 வயதாகும் அனிகா, சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் அவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட் பொம்மா, தெலுங்கு படமான இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா படத்தின் ரீமேக் ஆகும். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஓ மை டார்லிங் திரைப்படத்தில் லிப் லாக் காட்சிகளில் துணிச்சலான நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... 79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்! இது முடிவல்ல; அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும் என நம்பிக்கை
நடிகை அனிகாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நடிகை அனிகாவின் புகைப்படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள் அனிகாவுக்கு என்னாச்சு என கேட்கத் தொடங்கினர். அந்த போஸ்டரில் 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் இறந்ததாக குறிப்பிட்டு இருந்ததால் அது உண்மையான போஸ்டரா என்கிற கேள்வியும் எழுந்தது.
ரசிகர்கள் சந்தேகித்தது போலவே அது போலியான போஸ்டர் தான். அனிகா தற்போது நடித்து வரும் தமிழ் படத்துக்காக ஒட்டப்பட்ட போஸ்டர் தான் அது என்பது தெரியவந்ததும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரை தான் யாரோ போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். இருப்பினும் அது எந்த படத்துக்கான போஸ்டர் என்பதன் விவரம் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் நடிகைகளை தட்டிதூக்க பிளான் போடும் அஜித்... ‘விடாமுயற்சி’ பட ஹீரோயின் இவரா?