79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்! இது முடிவல்ல; அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும் என நம்பிக்கை
79 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் நீரோ, தனக்கு 7-வது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ராபர்ட் நீரோ. இவர் புகழ்பெற்ற காட்பாதர் என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார். இதுதவிர டாக்சி டிரைவர், கேப் பியர், தி ஐரிஷ் மேன், ரேஜிங் புல் உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ராபர்ட் நீரோவுக்கு தற்போது 79 வயதாகிறது. இந்த வயதில் அவர் பெயர் தற்போது டிரெண்டாகி உள்ளதற்கு காரணம் அவருக்கு தற்போது 7-வது குழந்தை பிறந்துள்ளது. 79 வயதில் தந்தையான குஷியில் இருக்கிறாராம் ராபர்ட் நீரோ.
ராபர்ட் நீரோவுக்கு கடந்த 1976-ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. அவர் அமெரிக்காவை சேர்ந்த நடிகை டியான்னே அபேட்டை திருமணம் செய்துகொண்டார். அவருடன் 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ராபர்ட் நீரோ, 1988-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளும் உள்ளன.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் நடிகைகளை தட்டிதூக்க பிளான் போடும் அஜித்... ‘விடாமுயற்சி’ பட ஹீரோயின் இவரா?
இதையடுத்து ஸ்மித் என்கிற மாடல் அழகியை திருமணம் செய்துகொண்ட ராபர்ட் நீரோவுக்கு ஜூலியன், ஆரோன் ஆகிய 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவரை பிரிந்து, கிரேஸ் ஹைடவரை மணந்தார் ராபர்ட் நீரோ. இந்த ஜோடிக்கு எலியட், ஹெலன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தான் தற்போது ராபர் நீரோ தனது 7-வது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.
79-வயதில் தந்தையாகி இருப்பதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள ராபர்ட் நீரோ அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே தனக்கு 6 குழந்தைகள் இருக்கின்றன. தற்போது 7-வது குழந்தை பிறந்துள்ளது. 79 வயது ஆனால் தனக்கு இன்னும் குழந்தைகள் பிறக்கும் என்கிற நம்பிக்கை உள்ளதாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இருப்பினும் தற்போது பிறந்துள்ள 7-வது குழந்தையின் தாய் யார் என்பதை ராபர்ட் தெரிவிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... இரண்டாவது திருமண நாளில் கணவருடன் கொண்டாடிய கயல் ஆனந்தி! வைரலாகும் போட்டோஸ்!