இரண்டாவது திருமண நாளில் கணவருடன் கொண்டாடிய கயல் ஆனந்தி! வைரலாகும் போட்டோஸ்!
கயல் படத்தின் மூலம், பிரபலமான நடிகை ஆனந்தி இந்த ஆண்டு குழந்தையுடன் தன்னுடைய இரண்டாம் ஆண்டு, திருமண நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் அனைத்து நடிகர் - நடிகைகளுமே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுவதில்லை. ஆனால் ஒரு சிலர் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்கவில்லை என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான, 'பொறியாளன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ஆனந்தி.
இப்படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை என்றாலும், இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கயல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில், பாவாடை - சட்டை அணிந்த ஒரு கிராமத்து பெண்ணாக, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆனந்தி. இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலித்து... விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது.
புது கார் வாங்கிய ஜோரில்.! கார் மேல் படுத்து வளைய வளைய போஸ் கொடுத்த பிக்பாஸ் ரக்ஷிதா!
இந்த படத்திற்கு பின்னர், கயல் படத்தின் ஹீரோ சந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ... கதாநாயகியாக நடித்த ஆனந்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள், கிடைக்க தொடங்கியது. மேலும் வெற்றி மாறனின் விசாரணை, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருமுனையாக அமைந்தன.
மேலும், ஜிவி பிரகாஷ் உடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா, தினேஷுக்கு ஜோடியாக இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, அதர்வாவுடன் சண்டி வீரன், விமலுக்கு ஜோடியாக மன்னர் வகையறா போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி பிசியாக நடித்து வந்த கயல் ஆனந்தி, திரை உலகில் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென தன்னுடைய காதலர் உடனான திருமணக் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை, கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னர், இவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் குழந்தைக்கு தாயான விஷயத்தைப் பற்றி பெரிதாக எந்த இடத்திலும் பேசாத ஆனந்தி, சமீபத்தில் ராவணக் கூட்டம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய குழந்தைக்கு ஜாதி இல்லா சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
மேலும் இதற்கு காரணம் தான் படித்த புத்தகங்களும், நண்பர்களுடன் நடந்த உரையாடல்களும் என பேசியது பலரையும் வியக்க வைத்தது. திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் கதாநாயகியாக நடித்தவரும் கயல் ஆனந்தி, இதுவரை தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளாத நிலையில்... தன்னுடைய இரண்டாம் ஆண்டு திருமண நாளை கணவர் சாக்ரடிஸுடன் கொண்டாடியபோது, எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் உங்களின் குழந்தை புகைப்படத்தை வெளியிடுங்கள் என கூறி வருகிறார்கள்.