- Home
- Cinema
- பிரம்மாஸ்திரா இயக்குனரை ஜீனியஸ்னு சொல்றவங்களை தூக்கி ஜெயில்ல போடனும் - நடிகை கங்கனா ரனாவத் காட்டம்
பிரம்மாஸ்திரா இயக்குனரை ஜீனியஸ்னு சொல்றவங்களை தூக்கி ஜெயில்ல போடனும் - நடிகை கங்கனா ரனாவத் காட்டம்
kangana Ranaut : யாரெல்லாம் அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட திரைப்படம் பிரம்மாஸ்திரம். இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்திருக்கிறார். இதுதவிர தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், கேமியோ ரோலில் ஷாருக்கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்தின் முதல் பாகமான ஷிவா நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது. இப்படம் ரிலீசாகும் முன்பே இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. படமும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... சூர்யா..கார்த்தியை தொடர்ந்து மாஸ் காட்டும் சிவகுமாரின் மகள் பிருந்தா..குவியும் வாழ்த்துக்கள்
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜியை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது : “யாரெல்லாம் அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். அவர் இப்படத்தை எடுக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே 14 ஒளிப்பதிவாளர்களை மாற்றியுள்ளார். 400 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தி உள்ளார். 85 அசிஸ்டண்ட் டைரக்டர்களை மாற்றி உள்ளார். 600 கோடியை வீணாக்கி இருக்கிறார். இதுபோதாதென்று ஜலாலுதீன் ரூமி என்கிற இப்படத்தின் பெயரை கடைசி நேரத்தில் ஷிவா என மாற்றி மத உணர்வுகளையும் புண்படுத்தி உள்ளார். பாகுபலி பட வெற்றியால் இவ்வாறு செய்துள்ளார்.
இத்தகைய படைப்பாற்றல் இல்லாத சந்தர்ப்பவாதிகளை ஜீனியஸ் என்று அழைப்பது என்பது இரவை பகல் என்றும் பகலை இரவென்றும் அழைப்பதைப் போன்றதாகும். என்று காட்டமாக விமர்சித்துள்ளார் கங்கனா.
இதையும் படியுங்கள்... இண்டர்வெல்லையே ஓடி வந்துடலாம்னு தோணுச்சு... பிரம்மாஸ்திரா படம் பார்த்து கதறிய பிரபல தமிழ் பாடகர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.