இண்டர்வெல்லையே ஓடி வந்துடலாம்னு தோணுச்சு... பிரம்மாஸ்திரா படம் பார்த்து கதறிய பிரபல தமிழ் பாடகர்
Brahmastra : தமிழில் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பிரம்மாஸ்திரா படத்தை பார்த்தபின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனம் வைரல் ஆகி வருகிறது.
பாலிவுட் திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒன்றாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு அங்கு வெளியான படங்களில் பெரும்பாலானவை அடுத்தடுத்து பிளாப் ஆகி வருவதால், முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் உள்ளனர்.
இது போதாதென்று அங்கு பாய்காட் டிரெண்டும் தலைதூக்கி உள்ளது. இதனாலேயே அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் படு தோல்வி அடைந்தது. தற்போது அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியாகி உள்ள பிரம்மாஸ்திரா படம் ரிலீசாகும் முன்னரும் அப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று டுவிட்டரில் தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வந்தன.
இதையும் படியுங்கள்... சூர்யாவை வைத்து சரித்திர படம்... ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் போட்டுள்ள மாஸ்டர் பிளான் - ஒர்க் அவுட் ஆகுமா?
ஆனால் படம் ரிலீசான போது ஒரு புறம் படு பாசிடிவ்வான விமர்சனங்களும், ஒருபுறம் படு நெகடிவ் ஆன விமர்சனங்களும் எழுந்து வந்தன. இதனால் படம் எப்படி இருக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தனர். ஆனால் உண்மையில் படம் சுமாராக இருப்பதாகவும், அப்படக்குழு பணம் கொடுத்து ஏராளமான பாசிடிவ் விமர்சனங்களை பரப்பி கோல்மால் வேலை செய்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தமிழில் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பிரம்மாஸ்திரா படத்தை பார்த்தபின் பதிவிட்டுள்ள விமர்சனம் வைரல் ஆகி வருகிறது. நான் பிரம்மாஸ்திரா தான் பார்க்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இண்டர்வெல்லையே எழுந்திருச்சு ஓடி வந்திடலாம்னு தோணுச்சு என பதிவிட்டுள்ளார். அவர் போட்ட இந்த டுவிட் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... தெலுங்கில் ரீ-ரிலீசாகி திடீர் ஹிட் அடித்த 3! வசூலில் சிரஞ்சீவி படத்தையே பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிய தனுஷ்