- Home
- Cinema
- சூர்யாவை வைத்து சரித்திர படம்... ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் போட்டுள்ள மாஸ்டர் பிளான் - ஒர்க் அவுட் ஆகுமா?
சூர்யாவை வைத்து சரித்திர படம்... ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் போட்டுள்ள மாஸ்டர் பிளான் - ஒர்க் அவுட் ஆகுமா?
Director Shankar : கைவசம் உள்ள மூன்று படங்களை முடித்த பின்னர் இயக்குனர் ஷங்கர் சரித்திர படம் ஒன்றிற்காக நடிகர் சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். ஜெண்டில்மேன் தொடங்கி எந்திரன் 2.0 வரை படத்துக்கு படம் பிரம்மிப்பை ஏற்படுத்தும் இவர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது ராம்சரணின் ஆர்.சி.15 திரைப்படம் தயாராகி வருகிறது.
அதேபோல் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இந்தியன் 2 படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளார் ஷங்கர். அப்படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தெலுங்கில் ரீ-ரிலீசாகி திடீர் ஹிட் அடித்த 3! வசூலில் சிரஞ்சீவி படத்தையே பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிய தனுஷ்
கைவசம் உள்ள மூன்று படங்களை முடித்த பின்னர் இயக்குனர் ஷங்கர், சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். இவர்களது கூட்டணியில் சரித்திர படம் ஒன்று தயாராக உள்ளதாம். அதன்படி மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி எனும் புத்தகத்தை தழுவி இப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியை சு.வெங்கடேசன் உடன் இணைந்து ஷங்கர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சு.வெங்கடேசன்
இதில் சூர்யாவை நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், இப்படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம். தெலுங்கில் சரித்திர கதையம்சம் கொண்ட படங்கள் ஏராளமாக வந்தாலும், தமிழில் தற்போது தான் பொன்னியின் செல்வன் மூலம் அந்த டிரெண்ட் ஆரம்பமாகி உள்ளது. அடுத்ததாக ஷங்கருக்கு அந்த ஆசை வந்துள்ளதால், இப்படம் திட்டமிட்டபடி எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை முடிவு எடுத்தது ஏன்?.. போலீஸின் முதற்கட்ட விசாரணையில் வெளியான திடுக் தகவல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.