MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரிலீசுக்கு முன்பே 9 சர்வதேச விருதுகளை தட்டித்தூக்கிய 'கண்டதை படிக்காதே' படம்- எப்புட்ரா என வியக்கும் ரசிகர்கள்

ரிலீசுக்கு முன்பே 9 சர்வதேச விருதுகளை தட்டித்தூக்கிய 'கண்டதை படிக்காதே' படம்- எப்புட்ரா என வியக்கும் ரசிகர்கள்

ஜோதி முருகன் இயக்கத்தில் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ள கண்டதை படிக்காதே திரைப்படத்திற்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 16 2023, 09:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
kandathai Padikaathey

kandathai Padikaathey

மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம் தான் கண்டதை படிக்காதே. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜோதி முருகன். புல்லி மூவிஸ் சார்பில் எஸ். சத்யநாராயணன் தயாரித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
kandathai Padikaathey

kandathai Padikaathey

படம் பற்றி சத்யநாராயணனிடம்பேசிய போது, "இப்படத்தின் கதை என்ன?சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண்  மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள்.அதன் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சிவராமன் புலனாய்வில் இறங்குகிறார். மர்மத்தின் வேர் தேடி கொடைக்கானல் செல்கிறார். அங்கே போன பிறகு தான் தற்கொலைகளுக்கான திகிலான சம்பவம் அவருக்குத் தெரிகிறது.

36
kandathai Padikaathey

kandathai Padikaathey

மணிமாறன் ஓர் எழுத்தாளர். ஒரு திகில் கதையை எழுதி இருக்கிறார். அந்தக் கதையைப் படித்த அவரது பேத்தி நிஷா அதை இணையதளத்தில் பதிவிடுகிறாள்.அந்தக் கதையைப் படித்ததால் நிஷாவும் இறந்து போகிறாள். இணையதளத்தில் வந்த அந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இந்தப் பட்டியலில் புலனாய்வு செய்யப் போன காவல்துறை அதிகாரியின் தங்கையும் அடக்கம். அதனால் இதன் பின்னணியில் உள்ள மர்மத்தைத் தேடி விசாரணை செய்கிறார். அவர் அதற்காகக் கொடைக்கானல் செல்கிறார். 

இதையும் படியுங்கள்... பிரபாஸ் ராமனாக அதகளப்படுத்தினாரா? அப்செட் ஆக்கினாரா? - ஆதிபுருஷ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ

46
kandathai Padikaathey

kandathai Padikaathey

அங்கே போய்ப் பார்த்தால் நிஷா இல்லை. அவர் நிஷாவின் பாட்டியைத் தான் சந்திக்கிறார். இதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலும் போது இதன் பின்னணியில் ஒரு சாமியார் இருப்பது தெரிகிறது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறந்து போன ஒரு தம்பதிகளின் ஆவிகள் செய்யும் வேலை தான் அது. இணையத்தில் வெளிவந்தது அவர்களது சொந்தக் கதையாகும். அவர்களின் கதையைப்  படிப்பவர்களை அந்த ஆவிகள் கொன்றுவிடுகின்றன என்று தெரிகிறது.

56
kandathai Padikaathey

kandathai Padikaathey

அந்த சாமியார் சிவராமனைக் கொல்ல முயல்கிறார். சிவராமன் அதை எப்படி எதிர்கொள்கிறார்? அந்த ஆத்மாக்களைத் தடுத்து எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த கண்டதை படிக்காதே திரைப் படத்தின் கதை. வளர்ந்து வரும் நட்சத்திர நடிகர்களால் படம் உருவாகியுள்ளது. ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், ராஜ் நவீன், சபிதா ஆனந்த் இவர்களுடன் தயாரிப்பாளர் சத்யநாராயணன் மணிமாறன் என்கிற எழுத்தாளர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

66
kandathai Padikaathey

kandathai Padikaathey

இப்படத்திற்கு இசை செல்வா ஜானகிராஜ், ஒளிப்பதிவு மஹிபாலன், படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,கலை முனி கிருஷ்ணா, பாடல்கள் ரவி தாசன்.  இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ,படப்பை போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படம் எடுக்கப்பட்டுள்ள முறையால் திரையிடப்பட்ட பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பாராட்டப்பட்டுள்ளது . பதினொரு நாடுகளில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம் , திரையிடப்பட்டு 11 சர்வதேச விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. ஒன்பது சர்வதேச  விருதுகள் வென்றுள்ளது. அப்படிப்பட்ட படம் வருகிற ஜூன் 30-ம் தேதி வெளியாகிறது. ஒரு புதுமையான திகில் அனுபவத்திற்குத் தயாராக இருங்கள்.

இதையும் படியுங்கள்... மாலத்தீவில் ஆண் நண்பர்களுடன்... கவர்ச்சி உடையில் அட்டகாசம் பண்ணும் குட்டி நயன் அனிகா! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh : மிஷ்கின் காலை தொட்டதால் கடுப்பானாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சைக்கு அவரே கொடுத்த செம பதிலடி
Recommended image2
Myna Nandhini : திருமண நாளில் வெளிவந்த டபுள் சர்ப்ரைஸ்.... கணவருடன் மைனா நந்தினி சொன்ன குட் நியூஸ்
Recommended image3
கிராமி விருது பந்தயத்தில் முதன்முறையாக நாமினேட் ஆன தமிழ் பாடல்... தேவன் ஏகாம்பரத்தின் வருவாய் பாட்டுக்கு குவியும் பாராட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved