பிரபாஸ் ராமனாக அதகளப்படுத்தினாரா? அப்செட் ஆக்கினாரா? - ஆதிபுருஷ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாகுபலி படத்திற்கு பின் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தற்போது நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஆதிபுருஷ். பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளார் ஓம் ராவத். இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார்.
ஆதிபுருஷ் திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அவர்கள் என்னென்ன விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள், ஆதிபுருஷ் சாதித்ததா அல்லது சோதித்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... ஆதிபுருஷ் முதல் பொம்மை வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ
நல்ல படம்
உண்மையாவே ஆதிபுருஷ் நல்ல படம். வி.எஃப்.எக்ஸ் மட்டும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம், மற்றபடி கதை விறுவிறுப்பாகவும், கவரும் வகையிலும் உள்ளது. பிரபாஸை கம்பீரமாக காட்டிய இயக்குனர் ஓம் ராவத்திற்கு நன்றி. ஒரு தமிழனாக சொல்கிறேன், இப்படம் கண்டிப்பாக பிக் அப் ஆகும் என பதிவிட்டுள்ளார்.
பேமிலி எண்டர்டெயினர்
ஆதிபுருஷ் விமர்சனத்தை மூன்று வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்லலாம். கதையும், இசையும் அருமையாக உள்ளது. ஹனுமன், சீதா, ராவணன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள தேவ்தத், கீர்த்தி சனோன், சையிப் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். பிரபாஸ் டீசண்டாக உள்ளார். இயக்கம் ஓகே தான். வி.எஃப்.எக்ஸ் சுமார். மொத்தத்தில் இது ஒரு பேமிலி எண்டர்டெயினர் என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் பாதி டல்
சில படங்களை நம்மால் 100 சதவீதம் கணிக்க முடியாது ஆனால் பாராட்டக்கூடிய படமாக அது இருக்கும். அப்படி ஒரு திரைப்படம் தான் ஆதிபுருஷ். டல் அடிக்கும் இரண்டாம் பாதியை தவிர படத்தில் ரசிகர்களுக்கு தேவையான கூஸ்பம்ஸ் தருணங்கள் போதுமான அளவு உள்ளது. படத்தின் நெகடிவ் வி.எஃப்.எக்ஸ் தான், அரவேக்காடாக இருக்கிறது. திரைக்கதை மற்றும் இசை தான் மிகப்பெரிய பிளஸ் என பதிவிட்டுள்ளார்.
வி.எஃப்.எக்ஸ் சுமார்
ஆதிபுருஷ் சூப்பர் படம். முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் சீன் தான். பின்னணி இசையும் அருமை. பிரபாஸ் நடிப்பு அற்புதமாக உள்ளது. கதாபாத்திர தேர்வும் கச்சிதம். பாடல்கள் தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். வி.எஃப்.எக்ஸ் சுமார். இந்த படத்திற்கு இன்னும் நன்றாக வி.எஃப்.எக்ஸ் இருந்திருக்கலாம். மொத்தத்தில் பிளாக்பஸ்டர் படம் என குறிப்பிட்டுள்ளார்.
ஏமாற்றம்
ஆதிபுருஷ் படத்தின் மிகப்பெரிய மைனஸாக வி.எஃப்.எக்ஸ் தான் சொல்லப்படுகிறது. அதன்படி நெட்டிசன் ஒருவர் அப்படத்தில் இடம்பெறும் பத்து தலையுடன் கூடிய ராவணன் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பதிவிட்டு மூன்றாம் தர வி.எஃப்.எக்ஸால் ஆதிபுருஷ் ஏமாற்றம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இண்டர்வெல் சீன் சூப்பர்
ஆதிபுருஷ் டீசண்ட் ஆன முதல் பாதி, மோசமான 2-ம் பாதி. மிகவும் மெதுவாக நகரும் முதல் பாதி, அருமையான இண்டர்வெல் காட்சியில் பிக் அப் ஆகிறது. அதேபோல் இரண்டாம் பாதி நன்றாக ஆரம்பித்தாலும், போகப்போக சோர்வை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் இது ஒரு பிலோ ஆவரேஜ் திரைப்படம் தான் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... இதென்ன பகல் கொள்ளையா இருக்கு... அனுமனுக்கு பக்கத்து சீட் ரேட் அதிகமா? ஆதிபுருஷ் படக்குழு விளக்கம்