ரோலெக்ஸ் சூர்யா போல் கேமியோ ரோலில் நடித்து மிரட்ட தயாராகும் கமல்ஹாசன்... அதுவும் யார் படத்துல தெரியுமா?
விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக வந்து சூர்யா மிரட்டியதைப் போல் பிரபல நடிகரின் படத்தில் பவர்புல்லான ஒரு கேமியோ ரோலில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விக்ரம் படம் தந்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி செம்ம பிசியாகிவிட்டார் கமல்.
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கை நிறைய படத்தோடு காத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சிறுத்தை சிவா டைரக்ஷன்ல 4 படம் நடிச்ச அஜித்... ஷங்கரின் 4 பிரம்மாண்ட படங்களை ரிஜெக்ட் செய்த கதை தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் நடிப்பதை போல் தயாரிப்பிலும் தற்போது முழுவீச்சில் இறங்கி உள்ளார், இவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இதுதவிர சிம்பு நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார் கமல். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
இப்படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். இப்படம் குறித்த தற்போதைய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக வந்து சூர்யா மிரட்டியதைப் போல் சிம்பு படத்தில் பவர்புல்லான ஒரு கேமியோ ரோலில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... முதலைமைச்சர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் - ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்