சிறுத்தை சிவா டைரக்ஷன்ல 4 படம் நடிச்ச அஜித்... ஷங்கரின் 4 பிரம்மாண்ட படங்களை ரிஜெக்ட் செய்த கதை தெரியுமா?
நடிகர் அஜித், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன 4 பிரம்மாண்ட படங்களில் நடிக்க மறுத்தது ஏன் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படத்தில் தொடங்கிய இவரது வெற்றிப்பயணம் 30 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனராக விளங்கி வரும் ஷங்கர், விஜய், ரஜினி, கமல், விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறார். இருப்பினும் அவர் நடிகர் அஜித் உடன் மட்டும் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
இயக்குனர் ஷங்கருக்கு மிகவும் பிடித்த நடிகராக அஜித் இருந்தும், அவருடன் இணைந்து அவர் இதுவரை ஒரு படத்தில் கூட பணியாற்றியதில்லை. இந்த கூட்டணி இணையாததற்கு முக்கிய காரணம் அஜித் தான் என கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற 4 படங்களில் அஜித் தான் ஹீரோவுக்கான முதல் சாய்ஸ் ஆக இருந்தாராம். ஆனால் அந்த 4 படங்களையும் அஜித் ரிஜெக்ட் செய்ததால் வேறு ஹீரோக்களை வைத்து இயக்கி வெற்றிகண்டுள்ளார் ஷங்கர்.
அஜித் - ஷங்கர் கூட்டணி முதன்முதலில் இணைய இருந்த படம் ஜீன்ஸ். இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி இருக்கிறார் ஷங்கர். ஆனால் அஜித்தால் அந்த சமயத்தில் இப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனதால், அவருக்கு பதில் பிரசாந்தை நடிக்க வைத்து, வெற்றிகண்டார் ஷங்கர். இப்படம் நடிகர் பிரசாந்தின் கெரியரில் மறக்க முடியாத படமாக மாறியது.
இதையும் படியுங்கள்... ஆஸ்கர் எஃபெக்ட்... உலகளவில் கூகுளில் வெறித்தனமாக தேடப்பட்ட நாட்டு நாட்டு பாடல் - அதுக்குன்னு இப்படியா?
இதையடுத்து முதல்வன் படத்திலும் அஜித்தை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்பியுள்ளார் ஷங்கர். அஜித் ஆர்வம் காட்டாததால் பின்னர் விஜய்யை அணுகிய ஷங்கர், அவரும் ஓகே சொல்லாத காரணத்தால் கடைசியாக அர்ஜுனை அந்த ரோலில் நடிக்க வைத்துள்ளார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அர்ஜுனின் கெரியரில் சிறந்த படமாக அமைந்தது.
அடுத்தபடியாக ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கி அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்த சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய 2 படங்களிலும் முதலில் நடிக்க இருந்தது அஜித்தானாம். இதன் பட்ஜெட்டை கேட்டவுடன், ஒருவேளை படம் தோற்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஆகி விடும் என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனக்கூறி ரிஜெக்ட் செய்துவிட்டாராம்.
இப்படி ஷங்கரின் 4 படங்களை அஜித் ரிஜெக்ட் செய்தாலும், அவரை வைத்து எப்படியாவது படம் இயக்கிவிட வேண்டும் என்று இன்றளவும் முயற்சித்து வருகிறாராம் ஷங்கர். தற்போது ஆர்.சி.15 படத்தில் கூட அஜித்தை வில்லனாக நடிக்க வைக்க ஷங்கர் முயற்சி செய்து வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்தமுறையாவது இந்த கூட்டணி இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... சொதப்பிய அட்லீ..? தள்ளிபோகிறதா 'ஜவான்' ரிலீஸ்..!