முதலைமைச்சர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் - ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்

ஊட்டி அருகே உள்ள முதுமலையில் படமாக்கப்பட்டது ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

the elephant whisperer director Kartiki Gonsalves tweet about cm mk stalin

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய ஆவணப்படம் இதுவாகும். இந்த ஆவணப்படம் ஊட்டி அருகே உள்ள முதுமலையில் தான் படமாக்கப்பட்டது. அங்கு ரகு, அம்மு என்கிற இரண்டு யானைகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வந்த பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு இன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆவணப்படத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப்படம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெட்பிளிக்சில் வெளியானது. இப்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் தான் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

the elephant whisperer director Kartiki Gonsalves tweet about cm mk stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில், முதுமலையில் இருந்து மைசூரு வழியாக பாகன் மனைவி பெல்லியை கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர். இதேபோல் தாய் யானைகளை இழந்த குட்டி யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணிக்காக சென்றிருந்த பொம்மனும் , தருமபுரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

the elephant whisperer director Kartiki Gonsalves tweet about cm mk stalin

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதுமலை தம்பதி பொம்மன் - பெல்லி வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்த பதிவை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் இப்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ். 

பொம்மன் மற்றும் பெல்லியை நமது மாண்புமிகு முதலமைச்சர் கௌரவித்ததைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு 95வது அகாடமி விருதுகளில் சுதந்திரத் திரைப்படத்திற்காக இந்தியாவிற்கான முதல் அகாடமி விருதை வென்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios