பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!
2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக விரிவடைய முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் மாநிலங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது பாஜக. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய தலைவர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான நல்லாரி கிரண் குமார் ரெட்டி, கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, பாரதிய ஜனதா கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நல்லாரி கிரண் குமார் ரெட்டி கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் கட்சியில் சேர கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும் பெயர் தெரியாத பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முறைப்படி கட்சியில் இணைவார் எனத் தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமை கிரணுக்கு கட்சியில் முக்கிய பதவியை வழங்கியுள்ளது என்றும், மேலும் அவரை அடுத்த தேர்தலில் ஆந்திராவில் கட்சியின் முகமாக முன்னிறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த நல்லாரி கிரண் குமார் ரெட்டி, 2009 மற்றும் 2010 க்கு இடையில் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
நவம்பர் 2010 இல் ஒருங்கிணைந்த மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா அமைப்பதற்கான காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை அவர் எதிர்த்தார். அதுவும் கடைசி நேரம் வரை அந்த நடவடிக்கையை எதிர்த்தார்.
பிப்ரவரி 2014 இல் நாடாளுமன்றத்தில் பிரித்தல் மசோதா நிறைவேற்றப்பட்ட ஒரு நாள் கழித்து, அவர் காங்கிரஸ் மற்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தெலுங்கர்களின் "கண்ணியத்தையும் கௌரவத்தையும்" நிலைநிறுத்தும் வாக்குறுதியின் பேரில், ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜெய் சமைக்யந்திர கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை ரெட்டி தொடங்கினார்.
ஆனால் 2014 தேர்தலில் அவரது கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார், ஆனால் கட்சியில் அவ்வளவு தீவிரமாக இல்லை. தற்போது அவர் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலுக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்