- Home
- Cinema
- பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்த கமல்! நிகழ்ச்சி துவங்குவதில் வந்த புது சிக்கல்? இதுக்கும் கமல் தான் காரணமா?
பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்த கமல்! நிகழ்ச்சி துவங்குவதில் வந்த புது சிக்கல்? இதுக்கும் கமல் தான் காரணமா?
உலகநாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்து விட்டதாகவும், ஆனால் நிகழ்ச்சி துவங்கி தொடர்ந்து நடத்துவதில் தான் சிறு குழப்பம் நீடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' மற்ற அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் சிம்ம சொப்பனம் என கூறலாம். ஒவ்வொரு வாரமும், டிஆர்பியில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு செம்ம டப் கொடுத்து வருவதால், பல தொலைக்காட்சிகள் பிக்பாஸ் சமயத்தில், தங்களின் டிஆர்பி-யை தக்க வைக்க வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தயாராகிறார்கள்.
அதிலும் கமல்ஹாசன் கலந்து கொள்ளும், 2 நாட்கள் தான் தாறுமாறாக டிஆர்பியை எகிறவைக்கும். மக்கள் பிரதிநிதியாக நின்று கமல் போட்டியாளர்களை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்புவது குறித்து பல விமர்சனங்கள் வரும் என்பதால், கமல்ஹாசனே சற்று கூடுதல் கவனத்தோடு தான் இந்த இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், 7-ஆவது சீசன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளதாகவும், இதில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆடிஷனில் கலந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, உமா ரியாஸ், KPY சரத், தொகுப்பாளர் மாகாபா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சீரியல் பிரபலங்கள், மாடல்கள், மற்றும் இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள தகவலில், கமல் ஹாசன்... பிக்பாஸ் புரோமோ ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து முடித்து விட்டதாகவும், ஆனால் நிகழ்ச்சி துவங்குவதில் தான் சிறு குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
கமல்ஹாச அடுத்தடுத்து 4 படங்களில் பிசியாக நடிக்க உள்ளார்... இயக்குனர் எச்.வினோத் மற்றும் ப்ராஜெக்ட் கே படத்திற்காக வெளிநாடுகளுக்கு கூட செல்ல வாய்ப்புள்ளது. அப்படி வெளிநாடுகளுக்கு சென்றால் கமல்ஹாசன் வார இறுதியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சாத்தியம் இல்லாத ஒன்று என்பதால்... நிகழ்ச்சியாளர்களுக்குள் சிறு குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாங்கிய சம்பளத்தை விட... கமல்ஹாசன் இந்த முறை அதிக சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால்... கண்டிப்பாக இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் களம் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கமல் பேசுவார் என தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.