MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உறவினர்கள் சொத்தை அபகரித்த விக்னேஷ் சிவன் தந்தை! நயன் - விக்கி மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

உறவினர்கள் சொத்தை அபகரித்த விக்னேஷ் சிவன் தந்தை! நயன் - விக்கி மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை, சிவக்கொழுந்து உறவினர்களுக்கே தெரியாமல் அவர்களின் சொத்தை அபகரித்ததாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 07 2023, 12:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கோலிவுட் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 40 வயதை எட்ட உள்ள போதிலும், இவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் நயன்தாராவோ, தன் மனதிற்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில் கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும், ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளையும் அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இவர் 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார். இருவரும் 7 வருடங்களுக்கு மேல், உருகி... உருகி... காதலித்து டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' சென்சார் தகவல் வெளியானது!

36

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது கோலிவுட், டோலிவுட், மாலிவுட் திரை உலகை தாண்டி... பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். முதல் பாலிவுட் படத்திலேயே  நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

46

வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நயன்தாரா, குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக அதிக நேரம் செலவிடுவதால், அதிக படங்களில் நடிக்காமல்... பிசினஸில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட கேரளாவில், அப்பார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்யும் தொழிலில் நயன் - விக்கி இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தனுஷ் D50 படத்தின் டைட்டில் இதுவா? சும்மா தாறு மாறா இருக்கே.. சமூக வலைத்தளத்தில் லீக்கான தகவல்!
 

56

இது ஒருபுறம் இருக்க, தற்போது நயன்தாராவின் மாமனாரும், விக்னேஷ் சிவனின் தந்தையுமான சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் உறவினர்கள் கொடுத்துள்ள புகார் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த புகார் மனுவில், விக்னேஷ் சிவனின் தந்தை தங்களுக்கே தெரியாமல் தங்களுடைய சொத்துக்களை அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
 

66

 இந்த புகார் மனுவில் விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா, ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், விரைவில் யார் சொல்வது உண்மை? யாருடைய பக்கம் நியாயம் உள்ளது என்பது பற்றிய தகவல் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் காசு கொடுத்து ஆபாசமா திட்டவைக்கிறார்! அவரை கைது செய்யுங்கள் டிஜிபி அலுவலகத்தில் ராஜேஸ்வரி பிரியா புகார்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dare Devil : அஜித்தின் டேர் டெவில் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
Sandakari Review : 7 வருட காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? சண்டக்காரி விமர்சனம்
Recommended image3
The Dark Heaven Movie Review : மரணத்தை முன்கூட்டியே சொல்லும் மர்ம புத்தகம் - தி டார்க் ஹெவன் விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved