Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' சென்சார் தகவல் வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் புதிய புரோமோவுடன் வெளியிட்டுள்ளது.
 

maveeran movie censor details released
Author
First Published Jul 6, 2023, 11:06 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு, கடைசியாக வெளியான 'பிரின்ஸ்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், எப்படியும் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர், மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'.  ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின், பிரமோஷன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது .

அதேபோல் இந்த படத்தில், இருந்து வெளியான சீன் ஆ... சீன்  ஆ...  பாடல் மற்றும் வண்ணாரப்பேட்டையில ஆகிய இரண்டு பாடல்கள்மே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

maveeran movie censor details released

தனுஷ் D50 படத்தின் டைட்டில் இதுவா? சும்மா தாறு மாறா இருக்கே.. சமூக வலைத்தளத்தில் லீக்கான தகவல்!

அதன்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சில ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

நயன்தாராவின் 'ஜவான்' பட லுக் லீக்! கோட் - சூட்டில் ஹாலிவுட் நாயகி ரேஞ்சில் தெறிக்கவிடும் லேடி சூப்பர் ஸ்டார்!

மிஸ்கின் வில்லனாகவும்,  அரசியல்வாதியாகவும் மிரட்டி உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், சரிதா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு, விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் சூப்பர் பவரை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios