கியூட் ஸ்மைல் உடன்... கலர்ஃபுல் உடையில் அழகு தேவதையாய் மிளிரும் பிரியா பவானி சங்கர் - வைரலாகும் போட்டோஸ்
கலர்ஃபுல் உடையில் கியூட்டான ஸ்மைல் உடன் நடிகை பிரியா பவானி சங்கர் நடத்தியுள்ள போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர், இவர் நடிப்பில் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் தயாராகி வருகின்றன. கமலின் இந்தியன் 2, ஜெயம் ரவி ஜோடியாக அகிலன், ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், அஜய் ஞானமுத்து இயக்கும் டிமாண்டி காலனி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதுதவிர தெலுங்கிலும் அறிமுகமாகி உள்ளார் பிரியா. டோலிவுட்டில் அவர் நடித்துள்ள முதல் படம் கல்யாணம் கமநீயம். இப்படம் சங்கராந்தி திருவிழவை ஒட்டி நாளை தெலுங்கில் ரிலீசாக உள்ளது. சந்தோஷ் போபன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
இதையும் படியுங்கள்... அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து துணிவு படம் பார்த்த நயன்தாரா - வைரலாகும் போட்டோ
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ந் தேதி ரிலீசான வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன வாரசுடு படமும் நாளை தான் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரிலீசாக உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக தான் பிரியா பவானி சங்கரின் கல்யாணம் கமநீயம் படம் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் தற்போது பிசியாக நடந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், அதில் தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது கலர்ஃபுல்லான உடையில் கியூட்டான ஸ்மைல் உடன் நடிகை பிரியா பவானி சங்கர் நடத்தியுள்ள போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... முதல் நாள் ஹவுஸ்புல்... 2-ம் நாளில் காத்துவாங்கிய தியேட்டர்கள்..! ஒருநாள் கூத்தாக மாறிய விஜய் - அஜித் படங்கள்