துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு முதல் நாளில் டிக்கெட் கிடைக்காத அளவு கூட்டம் அலைமோதிய நிலையில், 2-ம் நாளில் அப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் சிலவற்றில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் - அஜித். இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களை திருப்தி படுத்தும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி உள்ள படங்கள் தான் வாரிசு மற்றும் துணிவு. 9 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி உள்ள அஜித் - விஜய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

ஜனவரி 11-ந் தேதி ரிலீசான இந்த படங்களில் துணிவு படத்துக்கு அதிகாலை 1 மணிக்கும், வாரிசு படத்துக்கு அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. பெரும்பாலும் இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் அதிகளவில் வந்ததால், முதல் நாளில் இரண்டு படங்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. இதனால் இரண்டு படங்களும் முதல் நாளில் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருந்தது.

இதையும் படியுங்கள்... இந்த பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து மகிழலாம் வாங்க!

ஆனால் இரண்டாம் நாளில் இரண்டு படங்களுக்குமே பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த படங்களை வார நாட்களில் வெளியிட்டது தான். வழக்கமாக படங்கள் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்படும். ஆனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் புதன்கிழமை ரிலீஸ் ஆனதால், இரண்டாம் நாளில் அப்படங்களுக்கு கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Scroll to load tweet…

துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு முதல் நாளில் டிக்கெட் கிடைக்காத அளவு கூட்டம் அலைமோதிய நிலையில், 2-ம் நாளில் அப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் சிலவற்றில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டதை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி வார நாட்களில் ரிலீஸ் செய்தால் அஜித் - விஜய் படங்களாக இருந்தாலும் அது ஒருநாள் கூத்தாக மாறிவிடும் என்பதற்கு இந்த வீடியோக்கள் தான் உதாரணமாக தெரிகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... ஜல்லிக்கட்டின் பிறப்பிடம் மற்றும் ஜல்லிக்கட்டினால் வெடித்த போராட்டமும்… ஒரு பார்வை!!