ஜல்லிக்கட்டின் பிறப்பிடம் மற்றும் ஜல்லிக்கட்டினால் வெடித்த போராட்டமும்… ஒரு பார்வை!!

ஜல்லிக்கட்டின் பிறப்பிடம் பற்றியும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் வெடித்த போராட்டம் பற்றியும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

orgin of jallikattu and jallikattu ban controversery

ஜல்லிக்கட்டின் பிறப்பிடம் பற்றியும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் வெடித்த போராட்டம் பற்றியும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 
தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பழைமையான வீர விளையாட்டுகளில் ஒன்று. 

இதையும் படிங்க: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்

ஜல்லிக்கட்டின் பிறப்பிடம்:

3500 ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு இருந்ததற்கான சான்று நீலகிரியில் உள்ள கரிக்கியூர் கிராமத்தில் உள்ளது. அங்குள்ள பழமையான கல்லில் மாடுபிடி வீரர்கள் காளைகளை துரத்தும் காட்சி பதிவாகியுள்ளது. இதே போலவே காட்சி பொறித்த கல், மதுரை அருகேயுள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டியில் உள்ளதாம். இது 1500 ஆண்டுகள் பழமையானது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் இந்த ஜல்லிக்கட்டு நடந்ததற்கான சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் ஏறு தழுவுதல் என்றழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு பின்னர் பெயர் மாற்றப்பட்டது. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய மாவட்டங்கள் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மிக சிறப்பாக நடத்தப்படும். ஜல்லிக்கட்டு என்றால் காளைகளை அடக்குதல். வாடிவாசல் என்ற நுழைவாயில் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். மாடுபிடி வீரர்கள் காளையை பிடித்து, அடக்கினால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். தவறினால் மாடு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படும். 

இதையும் படிங்க: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு நடத்தப்படுவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் வெடித்த போராட்டம்: 

தமிழர்களின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக சென்னை மெரினாவில் ஜன.16 ஆம் தேதி முதல் மிக பெரும் போராட்டம் தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சுமார் 5000 பேர் ஜல்லிக்கட்டைக் காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளை ஏந்திய வண்ணம், இது தமிழரின் பெருமை மற்றும் தமிழ் கலாச்சாரம் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தின் எதிரொலியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் ஜன.16 அன்று தொடங்கிய போராட்டம் ஜன.23ஆம் தேதி திரும்பப்பெறப்பட்டது. ஜல்லிக்கட்டு நீண்ட சமூக மற்றும் கலாச்சார வரலாற்றைக் கொண்டிருந்தாலும், ஜல்லிக்கட்டு தடைக்கெதிரான போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios