கலாபவன் மணி முதல் விநாயகன் வரை... தமிழ் சினிமாவில் மாஸ் வில்லனாக மிரட்டிய மலையாள நடிகர்கள் - ஒரு பார்வை
தமிழ் படங்களில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக நடித்து ஆதிக்கம் செலுத்திய மலையாள நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த ஜொலித்த ஹீரோயின்கள் ஏராளம், அந்த வகையில் மலையாள திரையுலகம் தமிழ் சினிமாவுக்கு தந்த வில்லன்களும் ஏராளம். அந்த வகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து மிரள வைத்த நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கலாபவன் மணி
மலையாள சினிமா தமிழுக்கு தந்த ஒரு தரமான வில்லன் தான் கலாபவன் மணி. இவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் வில்லன் கதாபாத்திரங்களுக்கு மெருகேற்றுவார். தமிழில் ஹரி இயக்கிய ஆறு, சிம்புவின் குத்து, விக்ரம் உடன் ஜெமினி, கமல்ஹாசனுக்கு வில்லனாக பாபநாசம் என கலாபவன் மணி வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் வேறலெவல் ஹிட் அடித்துள்ளன.
பகத் பாசில்
மலையாள திரையுலகில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் பகத் பாசில், தமிழில் இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் வேலைக்காரன், விக்ரம் மற்றும் மாமன்னன் ஆகிய மூன்று படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தார் பகத். அதிலும் குறிப்பாக கடைசியாக இவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் இவரின் வில்லத்தனமான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடித்தள்ளினர்.
விநாயகன்
திமிரு படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் விநாயகன். அப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் ரவுடி குழுவில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த விநாயகன், அடுத்ததாக மரியான் படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த திரைப்படம் என்றால் அது சமீபத்தில் வெளியாகிய ஜெயிலர் தான். இப்படத்தில் ரஜினிக்கே வில்லனாக நடித்து மிரள வைத்திருந்தார்.
இதையும் படியுங்கள்... ஹீரோயின்களை மிஞ்சும் அழகு... ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியா இது? மோனிஷாவின் பியூட்டிபுல் போட்டோஸ்
டோவினோ தாமஸ்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் மாரி 2 படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டி இருந்தார் டோவினோ தாமஸ். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
ஐஎம் விஜயன்
கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த மற்றொரு கொடூர வில்லன் தான் ஐஎம் விஜயன். தமிழில் திமிரு, கொம்பன் போன்ற படங்களில் நடித்த இவர், கடைசியாக விஜய்க்கு வில்லனாக பிகில் படத்தில் நடித்திருந்தார். நிஜத்தில் இவர் ஒரு போலீஸ் அதிகாரி. அதுமட்டுமின்றி இளம் வயதில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்று இருந்தார்.
சுரேஷ் கோபி
பிரம்மாண்ட படங்களின் இயக்குனரான ஷங்கர், கேரளாவில் இருந்து தமிழில் அறிமுகப்படுத்திய வில்லன் தான் சுரேஷ் கோபி. இவர் ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தில் சிறிது நேரமே இவரது காதாபாத்திரம் இடம்பெற்று இருந்தாலும், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இதையும் படியுங்கள்... பள்ளி மாணவியாக மாறிய பிக்பாஸ் ஜனனி..! ஸ்கர்ட் அண்ட் ஷர்ட்டில் நடத்திய வேற லெவல் போட்டோ ஷூட்!