ஹீரோயின்களை மிஞ்சும் அழகு... ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியா இது? மோனிஷாவின் பியூட்டிபுல் போட்டோஸ்
ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருப்பவர் நெல்சன். இதற்கு காரணம் அவரின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ஜெயிலர் தான். பீஸ்ட் தோல்விக்கு பின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நெல்சன், ஜெயிலர் மூலம் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
நெல்சன் கோலமாவு கோகிலா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதற்கு முன்னர் அவர் இயக்கிய சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதால், கோலமாவு கோகிலா தான் அவரின் முதல் படமாக மாறியது.
கோலமாவு கோகிலா ஹிட் ஆனதும் தன்னுடைய நண்பன் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டாக்டர் என்கிற டார்க் காமெடி படத்தை கொடுத்தார் நெல்சன். இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்து ரூ.100 கோடி வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து பீஸ்ட் என்கிற தோல்வி படத்தை கொடுத்த நெல்சனுக்கு தற்போது ஜெயிலர் வெற்றி மாபெரும் பூஸ்ட் ஆக அமைந்துள்ளது.
நெல்சன் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகும் முன்னர் விஜய் டிவியில் பணியாற்றி வந்தார். அப்போதே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் மோனிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். நெல்சன் - மோனிஷா தம்பதிக்கு ஆத்விக் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி ராஜ்ஜியம்... வாரிசு பட லைஃப் டைம் கலெக்ஷனை நான்கே நாட்களில் தட்டி தூக்கிய ஜெயிலர்
நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரத்துக்கு மேல் பாலோவர்கள் உள்ளனர். இவரும் சினிமா ஹீரோயின் போல் செம்ம அழகாக இருப்பது தான் இந்த அளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பதற்கு காரணம்.
நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. அவர் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினியின் நெருங்கிய தோழியும் கூட.
நெல்சன் மனைவி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டால், ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி, நீங்க ஏன் சினிமாவில் ஹீரோயினா நடிக்க கூடாது என்பது தான். அந்த அளவுக்கு செம்ம அழகாக இருக்கும் மோனிஷாவின் போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Dhanush: இந்த நடிகை தான் வேண்டும்!அடம்பிடித்து தளபதி நாயகியை கமிட் செய்த தனுஷ்! வாரி வழங்கப்படுகிறதா சம்பளம்?