- Home
- Cinema
- வேற வழியில்ல... அனிருத்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - விருது விழாவில் ஓப்பனாக சொன்ன அரபிக் குத்து பாடகி
வேற வழியில்ல... அனிருத்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - விருது விழாவில் ஓப்பனாக சொன்ன அரபிக் குத்து பாடகி
Jonita Gandhi : பிரபல பாடகியான ஜோனிடா காந்தியும், அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் இசையமைத்த படங்கள் மாதம் ஒன்று ரிலீசாகி விடுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என 4 படங்கள் ரிலீசாகி விட்டன. இவை அனைத்திலும் பாடல்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் அனிருத், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுக்கு முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல் கீர்த்தி சுரேஷை அவர் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது பின்னர் இருவரும் நண்பர்கள் எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதுதவிர பிரபல பாடகியான ஜோனிடா காந்தியும், அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன. எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் பாடகி ஜோனிடா காந்தி சமீபத்திய விருது விழாவில் பேசி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட பாடகி ஜோனிடா காந்தியிடம், ரன்வீர் சிங், சூர்யா, அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இவர்களில் அனிருத் தான் சிங்கிளாக இருக்கிறார். அதனால் அவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என ஜோனிடா கூறினார்.
ஜோனிடாவின் இந்த பதில் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அனிருத்தும் ஜோனிடா காந்தியும் இணைந்து டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா, பீஸ்ட் படத்துக்காக அரபிக் குத்து, டான் படத்தில் பிரைவேட் பார்ட்டி என ஏராளமான ஹிட் பாடல்களை பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Agent Tina : 30 வருஷமா சினிமாவில் இருந்தும் திருப்புமுனை தந்தது ‘விக்ரம்’ படம்தான் - ஏஜண்ட் டீனாவின் மறுபக்கம்