Agent Tina : விக்ரம் படத்தில் ஏஜண்ட் டீனாவாக மிரட்டிய வசந்தி, சினிமாவில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.
கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. ரிலீசான இரண்டே நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்துள்ளது. விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல்வேறு மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தாலும், படம் பார்க்க வந்த ஆடியன்ஸுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது ஏஜண்ட் டீனா கதாபாத்திரம் தான்.

கமலின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக வரும் இந்த கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருப்பார். இவரின் அந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் பறந்தன. இப்படத்தை பார்த்த பின்னர் யார் இந்த ஏஜண்ட் டீனா என்பது தான் பலரது கேள்வியாக இருந்தது. இவரது இயற்பெயர் வசந்தி.
இவர் ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லையாம், ஏற்கனவே 30 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது. இவர் பிரபல நடன இயக்குனரான தினேஷ் மாஸ்டரிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் பணியாற்றி உள்ளார். மாஸ்டர் படத்தின் போது லோகேஷுக்கு அறிமுகமான வசந்திக்கு, விக்ரம் படத்தில் மாஸான வேடம் கொடுத்ததோடு மட்டுமின்றி அவரது வாழ்வில் திருப்புமுனையையும் ஏற்படுத்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படியுங்கள்... நோ சொல்லிவிட்டு... தனுஷ் படத்தில் இருந்து நைசாக விலகிய டான் நடிகை - அவருக்கு பதில் கமிட் ஆனது யார் தெரியுமா?
