நான் முஸ்லீம், என் மனைவி பிராமணர்.. 3 முறை திருமணம் செய்துகொண்டது ஏன்? - ஜெயம் ரவியின் தந்தை சுவாரஸ்ய பேட்டி
ஜெயம் ரவியின் தந்தை மோகன் தனது மனைவி வரலட்சுமியுடனான காதல் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்விட்டு பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி கோலிவுட்டில் சக்கை போடு போட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து அசத்தியிருந்தார் ஜெயம் ரவி. அப்படத்தின் வெற்றிக்குப் பின் இறைவன், சைரன், அகிலன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் தந்தை மோகன், இவரும் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் ஆவார். சமீபத்தில் மோகன் - வரலட்சுமி தம்பதியின் ஐம்பதாவது திருமண நாளை அவரது மகன்களான ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா இருவரும் கோலாகலமாக கொண்டாடினர். அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் ஜெயம் ரவியின் தந்தை மோகன் தனது மனைவி வரலட்சுமியுடன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தங்களது காதல் திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய மோகன், தான் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றும், அவரது மனைவி ஒரு பிராமண வீட்டு பெண் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி தனது உண்மையான பெயர் ஜின்னா என்றும் அந்த பேட்டியில் மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயன் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!
நடிகர் தங்கவேல் வீட்டில் தான் சிறுவயதில் வளர்ந்ததாகவும், தங்கவேலுக்கு குழந்தைகள் இல்லாததன் காரணமாக அவர் தன்னை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும் மோகன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தான் தனக்கு மோகன் என பெயர் வைத்ததாக கூறிய அவர், தங்கவேல் மூலம் தான் சினிமாவில் எடிட்டிங் கற்றுக்கொண்டதாக கூறி உள்ளார்.
அதுமட்டுமின்றி தனக்கும் தனது மனைவி வரலட்சுமிக்கு மூன்று முறை திருமணம் நடைபெற்ற சுவாரஸ்ய தகவலையும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மோகன். நாங்கள் மதம் விட்டு மதம் கல்யாணம் செய்துகொண்டதாக சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் நாங்கள் மனம்விட்டு தான் கல்யாணம் செய்துகொண்டோம் என்று இன்றளவும் குறையாத காதலுடன் மோகன் - வரலட்சுமி ஜோடி கொடுத்த பேட்டி தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இரண்டே நாளில் காதலை சொன்ன மஞ்சிமா மோகன்..! செய்தியாளர்கள் முன்னிலையில் உண்மையை உடைத்த கெளதம் கார்த்திக்!