இரண்டே நாளில் காதலை சொன்ன மஞ்சிமா மோகன்..! செய்தியாளர்கள் முன்னிலையில் உண்மையை உடைத்த கெளதம் கார்த்திக்!
நடிகர் கெளதம் கார்த்திக்கிற்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இந்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து... பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமான கெளதம் கார்த்திக், தந்தை கார்த்திக் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்கிற அடையாளத்தை தக்கவைத்து கொள்ள போராடி வருகிறார்.
ஆரம்பத்தில் அடல்ட் படங்களில் நடித்து பெயரை கெடுத்து கொண்ட கெளதம், சமீப காலமாக... வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், தன்னுடன் 'தேவராட்டம்' படத்தில் நடித்த, மலையாள நடிகை மஞ்சிமா மோகனை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், திடீர் என இருவரும் ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்டு காதலை உறுதி செய்தனர்.
'எதிர் நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்? கமிட்டான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்!
இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம், நவம்பர் 28 ஆம் தேதி... மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமண அறிவிப்பை வெளியிடும் விதமாக இந்த ஜோடி இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அப்போது முதலில் காதலை சொன்னது யார்? என எழுபட்ட கேள்விக்கு முதலில் காதலை சொன்னது நான் தான் என ஒப்புக்கொண்ட கெளதம், நான் கூறிய பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தான் மஞ்சிமா பதில் கூறியதாக தெரிவித்துள்ளார்.
Gautham Karthik
ஹனி மூன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு... இன்னும் திருமணமே ஆகவில்லை, திருமணம் ஆன பின்னர் அது குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். திரைப்படத்தில் நடிக்கும் போதே இருவரும் காதலித்தீர்களா என எழுபட்ட கேள்விக்கு? இல்லை படத்தில் நடிக்கும் போது, இருவரும் நண்பர்களாக தான் இருந்தோம், அதன் பின்பு தான் காதிலித்ததாக கூறியுள்ளனர்.
Gautham Karthik
உங்கள் காதலுக்கு பெற்றோர் ஒப்புக்கொண்டார்களா என்று கேட்டபோது? இரு வீட்டு தரப்பிலும் மிகவும் மகிழ்ச்சியாக எங்களின் காதலை ஏற்று கொண்டனர் என மஞ்சிமா மோகன் கூறினார். கௌதமின் தந்தை கார்த்தி என்ன சொன்னார் என கேட்டதற்கு, எனக்கு யார் வாழ்நாள் முழுவதும் ஊக்குவிப்பார்கள் என தோன்றுகிறதோ அவரை நீ தாராளமாக திருமணம் செய்து கொள் என தங்களின் காதலுக்கு தந்தை சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.
திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா என மஞ்சிமா மோகனிடம் கேட்டதற்கு? கண்டிப்பாக நடிப்பேன் தற்போது இரண்டு படங்கள் கைவசம் உள்ளது என தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர் ஒருவர் மஞ்சிமா மோகனின் ஜாதி குறித்து கேள்வி எழுப்பியதற்கு... இது காதல் திருமணம் அதற்க்கு ஜாதி முக்கியம் இல்லை, இந்த கேள்வியும் தேவை இல்லை என பதில் கூறினர் கெளதம் மஞ்சிமா ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.