பார்க்க தான் சிம்பிளா இருக்கு... ஆனா ரொம்ப காஸ்ட்லி! தலைசுற்ற வைக்கும் ஷாருக்கானின் டீ-சர்ட் விலை
ஜவான் பட நாயகன் ஷாருக்கான், விமான நிலையத்திற்கு அணிந்து வந்திருந்த ப்ளூ நிற ஹூடி டீ-சர்ட்டின் விலை விவரம் வெளியாகி உள்ளது.
shahrukh khan
பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் தற்போது ஜவான் என்கிற ஆக்ஷன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பிரபல கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கி உள்ளார். இப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் அட்லீ. இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
shahrukh khan
ஜவான் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் கைவசம் டுங்கி என்கிற திரைப்படம் உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இதனிடையே அண்மையில் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றிருந்த ஷாருக்கான் அங்கு நடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... என்ன அண்ணாத்த இப்படி பண்ணிட்டாரு! மாமன்னன் படத்தை பாராட்டி ரஜினி போட்ட டுவிட்டால் அப்செட் ஆன கீர்த்தி சுரேஷ்
shahrukh khan
பின்னர் ஓய்வெடுத்து அதிலிருந்து மீண்டுள்ள ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். அப்போது விமான நிலையத்திற்கு மனைவி கெளரி கான் மற்றும் மகன் ஆபிரஹாம் உடன் வந்த ஷாருக்கானின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. ஷாருக்கான் ஜீன்ஸ் பேண்ட்டும், ப்ளூ கலர் ஹூடி டீ சர்ட்டும் அணிந்து வந்திருந்தார். ஷாருக்கானின் இந்த உடை சிம்பிளாக இருந்தாலும் அதன் விலை தான் தலைசுற்ற வைக்கும் விதமாக உள்ளது.
அதன்படி நடிகர் ஷாருக்கான் அணிந்துவந்த ஹூடி டீசர்ட் ஹராட்ஸ் (Harrods) என்கிற நிறுவனத்தை சேர்ந்ததாம். இதன் விலையை இணையத்தில் தேடிப்பார்த்தால் 1094 அமெரிக்க டாலர்கள் என காட்டுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.89 ஆயிரமாம். இதைப் பார்த்த ரசிகர்கள் சிம்பிளாக இருக்கும் இந்த டீ-சர்ட் இவ்ளோ காஸ்ட்லியா என வாயடைத்துப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... சமந்தாவை போல் ஷோபிதாவையும் காதலித்து ஏமாற்றிய நாக சைதன்யா... பிரேக்-அப்பில் முடிந்த 2-வது காதல்?