சமந்தாவை போல் ஷோபிதாவையும் காதலித்து ஏமாற்றிய நாக சைதன்யா... பிரேக்-அப்பில் முடிந்த 2-வது காதல்?
நடிகை சமந்தாவின் மாஜி கணவரான நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவையும் பிரேக் அப் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா, இவரும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் விவாகரத்து செய்துவிட்டதாக ஒன்றாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இவர்களது விவாகரத்து குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே இதுவரை வெளியிடவில்லை. விவாகரத்துக்கு பின்னர் சமந்தாவும், நாக சைதன்யாவும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே சமந்தாவை பிரிந்த சில மாதங்களிலேயே நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பாட்டார் நாக சைதன்யா. இருவரும் ஜோடியாக டேட்டிங் எல்லாம் சென்றனர்.
இதையும் படியுங்கள்... பட வாய்ப்புகள் குவியும் சமயத்தில்... திடீரென சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சமந்தா - காரணம் என்ன?
இவர்கள் இருவரும் லண்டனில் டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தங்களது காதல் குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது காதலும் பிரேக் அப்பில் முடிந்துள்ளது. முதலில் சமந்தாவை திருமணம் செய்து விவாரத்து செய்த நாக சைதன்யா, தற்போது சோபிதாவை திருமணம் செய்யும் முன்னரே பிரேக் அப் செய்துள்ளது டோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது
இதையும் படியுங்கள்... ஒரு மாஸ் ஸ்பீச் கேட்க எல்லாரும் ரெடியா? ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா - அப்டேட் இதோ!