ஜான்வி கபூர் நடித்த 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் கேன்ஸ் 2025 பட விழாவில் திரையிடப்பட உள்ளது!
78வது கேன்ஸ் திரைப்பட விழா, மே 13 முதல் மே 24 வரை நடைபெற உள்ள நிலையில் இதில் ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடித்த 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

Cannes Film Festival:
78வது கேன்ஸ் திரைப்பட விழா:
நடிகை ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடிக்கும், 'ஹோம்பவுண்ட்', திரைப்படம், மே 13 முதல் மே 24 வரை நடைபெற உள்ள 78வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
Homebound Movie
ஹோம்பவுண்ட் படத்திற்கு கிடைத்த பெருமை:
கய்வான் இயக்கியுள்ள இந்தப் படம், அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே போல், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் இதுவாகும்.
Peddi First Look: ராம் சரண் RC16 ஃபர்ஸ்ட் லுக்; டைட்டில் வெளியீடு!
Janhvi Kapoor Instagram Post:
ஜான்வி கபூர் பதிவு:
இந்த தகவலை நடிகை ஜான்வி கபூர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜான்வி கபூர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக போட்டுள்ள பதிவில், "இந்திய சினிமா உலகையே கைப்பற்றும் தருணம் இது. #Homebound திரைப்படம் 78வது கேன்ஸ் திரைப்பட விழாவின் 'Un Certain Regard' பிரிவில் அதிகாரப்பூர்வ தேர்வில் இடம்பிடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன, இந்தப் பயணத்தை பெரிய திரைகளில் உங்களுக்குக் காண்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்! என்று கூறியுள்ளார்".
Janhvi Kapoor south Indian Movies
தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தும் ஜான்வி
இஷான் மற்றும் ஜான்வி இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர், தற்போது ஹோம்பவுண்ட் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். பாலிவுட் திரையுலகி தாண்டி ஜான்வி தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு இவர் ஜூனியர் என் டி ஆருக்கு ஜோடியாக நடித்த 'தேவாரா' படம் ரிலீஸ் ஆன நிலையில், இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். அதே போல் ராம் சரண் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் நடித்து வரும் பெடி படத்திலும் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜான்வி கபூருக்கு உபாசனா கொடுத்த பரிசு; ராம் சரணின் அம்மா என்ன கொடுத்து அனுப்புனாங்க தெரியுமா?