Peddi First Look: ராம் சரண் RC16 ஃபர்ஸ்ட் லுக்; டைட்டில் வெளியீடு!
RC16 First Look: 'குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிப்பில் அவரின் 16-ஆவது திரைப்படமாக உருவாகி வரும் படத்திற்கு 'பெடி ( PEDDI) ' என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவர் தேசிய விருது பெற்ற 'உப்பென்னா ' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், நடித்து வரும் 16 வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
முரட்டுத்தனமான தோற்றத்தில் ராம் சரண்:
பெடி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ராம் சரண் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இயக்குநர் புச்சிபாபு, மிகவும் கவனமாக ராம் சரண் கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெளிவாக தெரிகிறது. ராம் சரணின் தோரணையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு கூட்டியுள்ளது.
1370 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ள ராம்சரணின் அரண்மனை போன்ற வீட்டில் இம்புட்டு வசதிகளா?
முரட்டுத்தனமான தோற்றத்தில் ராம் சரண்:
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, 'பெடி' படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்களை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. ஒரு லுக்கில் மிகவும் முரட்டு தனம் பொருந்திய ஆள் போலவும், இன்னொரு போஸ்டரில், பீடி பிடித்துக்கொண்டு, மாஸான லுக்கில் காணப்படுகிறார். இந்த இரு போஸ்டர்களும் தற்போது வைரலாகி வருகிறது.
கேம் சேஞ்சர் படக்குழு:
மொத்தத்தில் இந்த படம், ராம் சரணை கேம் சேஞ்சர் தோல்வியில் இருந்து தேற்றும் ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருதினை பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லாவும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேம் சேஞ்சர் தோல்வி எதிரொலி; இன்ஸ்டாவில் தமனை அன்பாலோ செய்தாரா ராம் சரண்?