கேம் சேஞ்சர் தோல்வி எதிரொலி; இன்ஸ்டாவில் தமனை அன்பாலோ செய்தாரா ராம் சரண்?
கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி குறித்து தமன் பேட்டியளித்ததை அடுத்து அவரை நடிகர் ராம்சரண் சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்ததாக சர்ச்சை வெடித்தது.

Ram Charan vs Thaman : ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்தது. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். தில் ராஜு இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் கூட ஹிட் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து, படத்தின் இசையமைப்பாளர் தமன், ஒரு நேர்காணலில் பாடல்கள் ஹிட் ஆகாததற்கு ஹீரோவும் நடன இயக்குனரும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
Game changer Thaman
தமனின் நேர்காணல் கிளிப் இணையத்தில் வைரலான பின்னர், ராம் சரண் அவரை சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்ததாக வதந்திகள் பரவின. தமன் மீதுள்ள கோபத்தில் தான் ராம்சரண் அவரை அன்பாலோ செய்ததாக பலர் நம்பிய நிலையில், இதன் உண்மை பின்னணி என்ன என்பதை நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்துள்ளனர். அதன்படி இன்ஸ்டாகிராமிலோ, எக்ஸ் தளத்திலோ, ராம் சரண், தமனை இதுவரை ஃபாலோ செய்ததே இல்லையாம். பின்னர் எப்படி அன்பாலோ செய்திருக்க முடியும் எனக் கண்டுபிடித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்ஜர் பிளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்; புது குண்டை தூக்கிப்போட்ட தமன்!
Game Changer Movie Flop Reason
இந்த வாரம் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தமன் கூறுகையில், "ஒரு படத்தின் பாடல் வெற்றி பெறுவது இசையமைப்பாளரின் கையில் மட்டும் இல்லை. எனக்கு 25 மில்லியன் பார்வைகளைப் பெற முடிந்த பாடல்கள் உள்ளன, அதை போஸ்ட் செய்யும் போது, அது ரீல்ஸில் ஒர்க் ஆக வேண்டும். எப்படியிருந்தாலும், கேம் சேஞ்சரில் அது எனக்கு நடக்கவில்லை. டான்ஸ் மாஸ்டருக்கு அதில் பொறுப்பு உள்ளது, ஹீரோவுக்கும் உள்ளது. கேம் சேஞ்சர் படத்தில் எந்தப் பாடலுக்கும் நல்ல ஹூக்-ஸ்டெப் இல்லை. நீங்கள் அதைச் சரியாகச் செய்தால், ஒளிப்பதிவாளரும் அதைச் சரியாகப் படம்பிடிப்பார்." என்று தமன் கூறினார்.
Game changer Movie Loss
ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆனது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 180 கோடி ரூபாய் வசூலித்து ராம் சரணின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் ராம்சரண், அடுத்ததாக தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஒரு படம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதை இயக்கப்போவது யார் என்பது உறுதியாகவில்லை.
இதையும் படியுங்கள்... இசையமைப்பாளர் தமனின் மனைவி தமிழில் இத்தனை மாஸ்டர் பீஸ் பாடல்களை பாடியுள்ளாரா?