இசையமைப்பாளர் தமனின் மனைவி தமிழில் இத்தனை மாஸ்டர் பீஸ் பாடல்களை பாடியுள்ளாரா?
இசையமைப்பாளர் தமனைப்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள், ஆனால் அவரது மனைவி ஸ்ரீவர்தினி ஒரு பாடகி என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பாடிய பாடல்கள் பற்றி பார்க்கலாம்.

Music Director Thaman Wife Srivardhini Hit Songs in Tamil : பிரபலங்களின் மனைவி சினிமாவில் நடித்தாலோ அல்லது பாடினாலோ ஈஸியாக அவரது பெயர் ரீச் ஆகிவிடும். ஆனால் இசையமைப்பாளர் தமனின் மனைவி ஸ்ரீவர்தினி, சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாடகியாக கலக்கி வந்தாலும் அவரைப் பற்றி பெரியளவில் வெளியே தெரியவில்லை. மிகவும் அண்டர் ரேட்டட் பாடகியாக ஸ்ரீவர்தினி உள்ளார். அவர் பாடிய பாடல்களையெல்லாம் கேட்டால் இதெல்லாம் இவங்க பாடிய பாட்டா என நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.
Singer Srivardhini Tamil Hit Songs
ஸ்ரீவர்தினியை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் வித்யாசாகர் தான். இவர் இசையமைத்த அள்ளித்தந்த வானம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாலே மிய்யா மிய்யா’ பாடல் தான் ஸ்ரீவர்தினி பாடிய முதல் பாடல். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. ஒரு நாள் இப்பாடலை கேட்டு இம்பிரஸ் ஆன டி.ராஜேந்தர், ஸ்ரீவர்தினியை தான் இசையமைத்த காதல் அழிவதில்லை படத்தில் பாட வைத்தார். அப்படத்தில் இடம்பெற்ற ‘என் மனசில் நீயே தானா’ என்கிற சூப்பர் ஹிட் பாடலை பாடியது ஸ்ரீவர்தினி தான்.
இதையும் படியுங்கள்... மூட்டை தூக்கி படிக்கும் மாணவன்; தளபதியை தொடர்ந்து உதவ முன்வந்த இசையமைப்பாளர் தமன்!
Singer Srivardhini Hit Songs in Tamil
இதையடுத்து சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான அலை படத்திற்காக வித்யாசாகர் இசையில், ‘என் ரகசிய கனவுகள்’ என்கிற பாடலை பாடி இருந்தார் ஸ்ரீ வர்தினி. பின்னர் 2004-ம் ஆண்டு இசையமைப்பாளர் தமனை திருமணம் செய்துகொண்ட பின்னர் இல்லற வாழ்க்கையில் பிசியான ஸ்ரீவர்தினிக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. கல்யாணத்துக்கு பின் சுமார் 6 ஆண்டுகள் சினிமாவில் பாடல்கள் பாடாமல் பிரேக் எடுத்திருந்தாலும் அந்த காலகட்டத்தில் முறையாக இசைப்பயிற்சியும் எடுத்து வந்தாராம் ஸ்ரீவர்தினி.
Singer Srivardhini Songs
இதனிடையே ஒரு நாள் இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் இருந்து பாட அழைப்பு வந்திருக்கிறது. 6 ஆண்டு இடைவெளிக்கு பின் தரமான கம்பேக் கொடுக்கும் பாடலாக அது அமைந்தது. அந்தப் பாடல் வேறெதுவுமில்லை, சிறுத்தை படத்தில் நம் அனைவரின் மனதையும் உருக வைத்த ‘ஆராரோ ஆரிராரோ’ என்கிற தாலாட்டு பாட்டு தான். அப்பாடல் அந்த சமயத்தில் மிகவும் வைரல் ஆனது. அந்த மேஜிக் வாய்ஸுக்கு சொந்தக்காரர் ஸ்ரீவர்தினி தான்.
Singer Srivardhini Viral Hit Song
இப்படி பிற இசையமைப்பாளர்கள் இசையிலேயே பாடி இருக்கிறாரே தமன் இசையில் ஸ்ரீவர்தினி பாடவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர் இசையிலும் ஒரு வைரல் ஹிட் பாடலை பாடி இருக்கிறார் ஸ்ரீவர்தினி. அது என்ன பாடல் என்றால்... விஷால், ஆர்யா நடித்த எனிமி படத்தில் இடம்பெற்ற ‘டம் டம்’ பாடல் தான். இந்தப் பாடல் வெளியானபோது இதற்கு ரீல்ஸ் வெளியிடாதன் இன்ஸ்டா பிரபலங்களே இல்லை அந்த அளவுக்கு வைரல் ஆனது. இன்றளவும் கல்யாண வீடுகளில் இந்த பாடல் கட்டாயம் இடம்பெறும். அந்த வைரல் பாடலை பாடியதும் ஸ்ரீவர்தினி தான்.
இதையும் படியுங்கள்... Thaman Net Worth: இசையமைப்பாளர் தமனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா