மூட்டை தூக்கி படிக்கும் மாணவன்; தளபதியை தொடர்ந்து உதவ முன்வந்த இசையமைப்பாளர் தமன்!
'நீயா நானா' நிகழ்ச்சியில் மூட்டை தூக்கி கூலி வேலை செய்து கொண்டே, படித்து வருவதாக மாணவன் ஒருவர் தன்னுடைய கண்ணீர் கதையை கூற, தற்போது அந்த மாணவனுக்கு இசையமைப்பாளர் தமன் உதவி செய்துள்ளார்.
Neeya Naana Reality Show
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், வித்தியாசமான கன்டென்ட் விவாதிக்க பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்சியில் சூழ்நிலை காரணமாக பார்ட் டைம் வேலை செய்து கொண்டே படிக்கும் மாணவ - மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சங்கடங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
neeya? naana?
இதில் பேசிய ஒவ்வொரு மாணவர்களின் கதையும், அவர்களின் கண்ணீரும்... அவர்களின் வேதனையை எடுத்து கூறியது. இதில் கலந்து கொண்ட கோவில் பாட்டியை சேர்ந்த மாணவர் ஒருவர்... " மூட்டை தூக்கி சம்பாதித்தது தன்னுடைய வீட்டின் கஷ்டத்தையும் போக்கி விட்டு, தானும் படிப்பதாக கூறினார். மேலும் மூட்டை தூக்கி தூக்கி தன்னுடைய ஒரு பக்கம் தோல் கடுமையாக வலித்தாலும்... அதனை நான் அம்மாவிடம் காட்டிக்கொள்ள மாட்டேன் என கூறினார்.
பூங்கொடி டீச்சருக்காக... மாரி செல்வராஜ் பாடிய பாடல்! மனுஷனுக்கு பல திறமை இருக்கும் போலயே..! - வீடியோ
Neeya Naana This Week episode
தினமும் மாலை 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்து வரும் இந்த மாணவர்... தன்னுடைய வீட்டுக்கு போகும் பஸ்ஸை மிஸ் பண்ணிவிட்டால், 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு நடந்தே செல்வேன் என கூறினார். இந்த மாணவரின் பேசும்... சிறு வயதிலேயே இப்படி ஒரு பக்குவமா என பலரையும் வியக்க வைத்தது.
Vijay Help Neeya Naana Contestant
இந்த வீடியோவை பார்த்ததும், தளபதி விஜய் ரசிகர்கள் சிலர் மாணவனின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக அவரின் அம்மா தூங்குவதற்கு பெட் வாங்கி கொடுத்தது மட்டும் இன்றி, விஜய்யின் உத்தரவின் பெயரில், 25000 பணம் கொடுத்து உதவியுள்ளதாக கூறப்பட்டது. அதே போல் அந்த மாணவரின் படிப்பு செலவையும் தளபதி விஜய்யே ஏற்று கொண்டதாக கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க.. விஜயை தொடர்ந்து இந்த மாணவருக்கு பிரபல இசையமைப்பாளர் தமனும் உதவியுள்ளார்.
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல..! படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை பரபரப்பு புகார்!
Thaman Help
அதாவது அந்த மாணவர் வேலை செய்து விட்டு... 3 கிலோமீட்டர் நடந்து போக கூடாது என்பதற்காக, பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்த அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பலர் தங்களின் பாராட்டுக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.