பணம் கொடுத்தால் ரஜினி மனைவியாக நடிக்கலாம்; மோசடியில் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன நடிகை
ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மோசடி கும்பல் ஒன்று தன்னை தொடர்புகொண்டதாக நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Jailer 2 – Scam attempt in the name of Rajinikanth’s film casting! நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் 650 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் மீண்டும் நெல்சன் உடன் கூட்டணி சேர்ந்துள்ள ரஜினி, ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.

Jailer 2 movie Scam
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நடிகையிடம் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷைனி சாரா. இவரது வாட்ஸப்பிற்கு ஜெயிலர் 2 படத்தில் ரஜினி மனைவியாக நடிக்க ஆடிஷன் நடைபெற்று வருவதாகவும், அதில் கலந்துகொள்ள கலைஞர் அட்டை கட்டாயம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்... Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் இவரா? பயங்கரமான ஆளாச்சே - வெளியான வேற லெவல் அப்டேட்!
Shiny Sara
ஷைனி சாரா மலையாள நடிகை என்பதால் அவர் தன்னிடம் கலைஞர் அட்டை இல்லை என கூறியதும் அதை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக கூறி இருக்கிறார்கள். பின்னர் அவரை வீடியோ கால் வழியாக நேர்காணல் செய்ய அழைத்திருக்கிறார்கள். அப்போது ரம்யா கிருஷ்ணன் தான் ஏற்கனவே ரஜினி மனைவியாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறாரே என கேட்டபோது, இது வேறொரு படத்திற்கான வாய்ப்பு என கூறி இருக்கிறார்கள்.
Actress Shiny Sara
கலைஞர் அட்டைக்காக ஷைனியின் ஆதார் விவரங்களை கேட்டுள்ளது மோசடி கும்பல், பின்னர் அந்த அட்டைக்கான தொகையாக ரூ.12 ஆயிரத்து 500 உடனடியாக செலுத்துமாரு கூறி இருக்கிறார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நடிகை 2 நாள் அவகாசம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களோ முதல் தவணையாவது கட்டுங்கள் என வற்புறுத்தி இருக்கிறார்கள். இது ஷைனிக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், கோலிவுட்டில் நடித்த நடிகை ஒருவரை தொடர்பு கொண்டு, நடந்ததை கூறி இருக்கிறார். அதற்கு அந்த நடிகை கோலிவுட்டில் பணியாற்ற கலைஞர் அட்டையெல்லாம் தேவையில்லை என்று கூறி பின்னர் தான் தன்னிடம் தொடர்பு கொண்டது மோசடி கும்பல் என ஷைனிக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் இதுபோன்ற அழைப்புகள் வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என ஷைனி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Jailer 2: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம் - ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!