சூர்யா - ஜோதிகா இடையே சண்டையா?.. திடீரென ‘ஜோ’ பெயரை நீக்கி அதிர்ச்சி கொடுத்த தேசிய விருது நாயகன்- என்ன காரணம்?
Suriya - Jyothika : விருமன் படம் தொடங்கியபோது வெளியிடப்பட்ட போஸ்டர்களில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கும் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது ரிலீஸ் சமயத்தில் வெளியிடப்படும் போஸ்டர்களில் ஜோதிகாவின் பெயரே இடம்பெறவில்லை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது காதல் மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக இவர்களது தயாரிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது.
இவர்களது தயாரிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் விருமன். கார்த்தி நடித்துள்ள இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். குட்டிபுலி, மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கிய முத்தையா தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும், சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி பாடியிருந்த நிலையில், அதனை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர் பாட வைத்து அப்பாடலை வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படியுங்கள்... பாட்டு போட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த யுவன் சங்கர் ராஜாவை கடத்திய பிரபல நடிகர்
தற்போது அடுத்த சர்ச்சையாக, இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, தனது தயாரிப்பில் இதற்கு முன் வெளியான கார்கி, ஜெய் பீம் போன்ற படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கும் என குறிப்பிட்டிருந்தார். விருமன் படம் தொடங்கியபோது வெளியிடப்பட்ட போஸ்டர்களில் கூட அவ்வாறு தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் சமயத்தில் வெளியிடப்படும் எந்த போஸ்டரிலும் ஜோதிகாவின் பெயரே இடம்பெற வில்லை.
சூர்யா தயாரிக்கும் விருமன் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஜோதிகா பெயர் நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ சூர்யா - ஜோதிகா இடையே சண்டை ஏற்பட்டுவிட்டதால் தான் இப்படி நடந்திருக்கலாம் என பல தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரியாமல் ரசிகர்களும் குழம்பிப்போய் உள்ளனர். விரைவில் சூர்யா - ஜோதிகா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பச்சை நிற குட்டை கவுனில்... கவர்ச்சி கிளியாக மாறிய பிக்பாஸ் பிந்து மாதவி! வேற லெவல் ஹாட் போஸ்..