பச்சை நிற குட்டை கவுனில்... கவர்ச்சி கிளியாக மாறிய பிக்பாஸ் பிந்து மாதவி! வேற லெவல் ஹாட் போஸ்..
தமிழில், 'பொக்கிஷம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார்.
தமிழில், நடிகர் சேரன் இயக்கி நடித்த 'பொக்கிஷம்' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் பிந்து மாதவி. இந்த படத்திற்கு பின்னர் தமிழில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால், தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். அங்கு இவர் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து வெப்பம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'கழுகு' திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து சில தமிழ் பட வாய்ப்புகள் இவரது கதவை தட்டியது. 'கழுகு' படத்தின் இரண்டாம் பக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில், அந்த படம் முதல் பாகம் அளவிற்கு வெற்றிபெறாமல் போனது.
மேலும் செய்திகள்: குட்டி மகள் மற்றும் காதல் கணவருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் ஸ்ரேயா..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
தற்போது இவரின் கைவசம் தெலுங்கில் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தமிழில் 'மாயன்' , 'யாருக்கும் அஞ்சலே' , பகல்வனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விட்ட இடத்தை பிடிக்கலாம் என பிந்து மாதவி கனவு கண்ட போதிலும், அந்த கனவும் பலிக்காமல் போனது.
தற்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, பட வாய்ப்புகளுக்கு அடி போட்டுவரும் பிந்து... தூக்கலான கவர்ச்சியில், குட்டை கவுனில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: பஞ்சு போன்ற மேனியை... பளீச் என காட்டி மாடர்ன் உடையில் மயக்கும் அதிதி ஷங்கர்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!