- Home
- Cinema
- விக்னேஷ் சிவனுக்கு ‘ஏகே 62’ பட வாய்ப்பு கைநழுவி போனதற்கு நயன்தாரா தான் காரணமா? தீயாய் பரவும் தகவல்
விக்னேஷ் சிவனுக்கு ‘ஏகே 62’ பட வாய்ப்பு கைநழுவி போனதற்கு நயன்தாரா தான் காரணமா? தீயாய் பரவும் தகவல்
அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கு நயன்தாரா தான் முக்கிய காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் அஜித்தும் இணைந்து படம் பண்ன உள்ளதாக கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என பெயரிடப்பட்டதோடு, அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்விலும் ஈடுபட்டு வந்தார் விக்கி. அதன்படி, வில்லனாக அரவிந்த சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இப்படி படு ஜோராக நடைபெற்று வந்த ஏகே 62 பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்தப்பட்டு, அப்படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர். அவருக்கு பதில் மகிழ் திருமேனி தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இதையும் படியுங்கள்... 2 முறை பிரேக்-அப் ஆனாலும்... காதல் மீதுள்ள நம்பிக்கையை கைவிடாமல் வெற்றிகண்ட நயன்தாராவின் லவ் ஸ்டோரி ஒரு பார்வை
முதலில் விக்னேஷ் சிவன் தயார் செய்த கதை அஜித்துக்கும், லைகா நிறுவனத்தினருக்கும் பிடிக்காததன் காரணமாகவே அவரை இப்படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது புது தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால் விக்னேஷ் சிவன் ஏகே 62-வில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் நயன்தாரா என்று கூறப்பட்டு வருகிறது.
ஏகே 62-வில் நயன்தாராவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தாராம். ஆனால் லைகா நிறுவனம் திரிஷாவை கைகாட்ட, அதற்கு நோ சொல்லிவிட்டாராம் விக்கி. பின்னர் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளையும் லைகா தரப்பில் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் ரிஜெக்ட் பண்ணிவிட்டாராம் விக்கி. கடைசியில் பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேசி சம்பளத்தை உறுதிசெய்ய இருந்த நேரத்தில் அவரையும் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
இப்படி ஹீரோயின் விஷயத்தில் விக்னேஷ் சிவன் பிடிவாதம் பிடித்ததன் காரணமாக கடுப்பான லைகா நிறுவனமும், அஜித்தும் இது சரிப்பட்டு வராது என்கிற முடிவுக்கு வந்து விக்கியை படத்தில் இருந்து நீக்கும் முடிவுக்கு வந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் திருமணமே செய்யாமல் டேட்டிங் செய்யும் காதல் ஜோடிகள் இத்தனை பேரா? என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.