- Home
- Cinema
- அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்படும் சமந்தா... மாஜி மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு நாகசைதன்யா திடீர் விசிட்..?
அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்படும் சமந்தா... மாஜி மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு நாகசைதன்யா திடீர் விசிட்..?
அரியவகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் நாக சைதன்யா மருத்துவமனைக்கே நேரில் சென்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமலும், சமூக வலைதளங்கள் பக்கம் தலைகாட்டாமலும் இருந்து வந்தார். அவர் உடல்நிலை சரியில்லாததன் காரணமாகத் தான் இவ்வாறு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார். சமந்தா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... பாலிவுட் வசம் சிக்கி படாதபாடு படும் கைதி ரீமேக்..! படத்துல ஒன்னில்ல... ரெண்டு ஹீரோயினாம்
இதனிடையே சமீபத்தில் சமந்தாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் நாக சைதன்யா மருத்துவமனைக்கே நேரில் சென்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன. ஆனால் அந்த தகவல் துளிகூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. சமந்தா தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம்.
அதேபோல் நாக சைதன்யாவும் ஷூட்டிங்கில் படு பிசியாக உள்ளாராம். இதன்மூலம் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதாக பரவி வரும் தகவல் துளிகூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. மறுபுறம் நாக சைதன்யாவின் சகோதரர் அகில், சமந்தாவுக்கு சமூக வலைதளம் வாயிலாக விரைவில் நலம்பெற்று வருமாறு வாழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அஜித் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா? வெளிநாட்டில் போனியாகாத துணிவு.. வாரிசு பட பிசினஸில் பாதிகூட கிடைக்கலயாம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.