யுவன் போட்ட டியூனை அட்லீக்காக ஆட்டைய போட்டாரா அனிருத்? காப்பி சர்ச்சையில் சிக்கிய ஜவான் பட பாடல்
அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் முதல் பாடல் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அட்லீ. தற்போது கோலிவுட்டில் அவர் கைவசம் விஜய்யின் லியோ, ரஜினி நடித்த ஜெயிலர், அஜித்தின் விடாமுயற்சி, கமல் நடிக்கும் இந்தியன் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வரிசைகட்டி நிற்கின்றன. இதுபோதாதென்று, பிற மொழிகளில் இருந்தும் அனிருத்திற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் அவர் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் ஜவான்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார் அனிருத். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளதால், அதன் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஜவான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டு இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியான இப்பாடலை மூன்று மொழிகளிலுமே அனிருத் தான் பாடி இருந்தார்.
இதையும் படியுங்கள்... ஆளவிடுங்கடா சாமி... ரசிகர்கள் தொல்லையால் பேஸ்புக் டிபி-யை நீக்கிய ‘ரத்னவேலு’ பகத் பாசில்
தமிழ் திரையுலகை பொறுத்தவரை படம் ரிலீஸ் ஆகும் வரை வீடியோ பாடலை வெளியிட மாட்டார்கள். பாடல் ரிலீஸ் செய்தால் அதனை லிரிக்கல் வீடியோவாக மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் பாலிவுட் அப்படியே உல்டாவாக செயல்படும். அங்கு ரிலீசுக்கு முன்பே வீடியோ பாடலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தான் ஜவான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளையும் வீடியோ பாடலாக ரிலீஸ் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்களுடன் ஷாருக்கான் நடனமாடும் வகையில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருந்தார் அட்லீ.
இப்படி ஜவான் பாடல் யூடியூப்பில் செம்ம வைரலாகி வரும் நிலையில், தற்போது காப்பி சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதன்படி இப்பாடலின் டியூன் மாநாடு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த வாய்ஸ் ஆஃப் யூனிட்டி என்கிற தீம் மியூசிக்கில் இருந்து சுட்டு தான் அனிருத் போட்டுள்ளதாக சில ஒப்பிட்டு வருகின்றனர்.
ஒரு சிலரோ இது வலிமை படத்தில் இடம்பெறும் நாங்க வேற மாரி பாடலுக்காக யுவன் இசையமைத்த டியூன் என கூறுகின்றனர். இதைப்பார்த்த அனிருத் ரசிகர்கள், நாங்க வேறமாரி பாடல் டியூனே அனிருத் இசையில் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது தான் எனக்கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர். கூட்டிக்கழித்து பார்த்தால் தன் பாடலையே அட்லீக்காக பட்டி டிங்கரிங் பார்த்து அனிருத் பாலிவுட்டில் களமிறக்கி உள்ளார் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... 15 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகும் சுப்ரமணியபுரம்... ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த புது வெர்ஷன் டிரைலர் இதோ