ஆளவிடுங்கடா சாமி... ரசிகர்கள் தொல்லையால் பேஸ்புக் டிபி-யை நீக்கிய ‘ரத்னவேலு’ பகத் பாசில்
மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக நடித்துள்ள பகத் பாசில் சமூக வலைதள சர்ச்சையால் தன்னுடைய பேஸ்புக் டிபியை ஒரே நாளில் நீக்கி உள்ளார்.
மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட பின், கடந்த ஜூலை 27-ந் தேதி ஓடிடியில் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸான இப்படம் இந்தியளவில் டிரெண்டாகி நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. ஆனால் இந்த டிரெண்டிங்கை நினைத்து மாமன்னன் படக்குழு உற்சாகமடையவில்லை. இதற்கு காரணம் பகத் பாசில் தான். அவர் இப்படத்தில் சாதி வெறி பிடித்த அரசியல்வாதியான ரத்னவேலு என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.
படத்தின் கதைப்படி அவர்தான் வில்லன். ஆனால் நெட்டிசன்கள் அவரை ஹீரோ போல் சித்தரித்து மீம் வீடியோக்களை வெளியிட்டனர். எந்த பாடல் போட்டாலும் அவருக்கு செட் ஆவதால், பல்வேறு சாதியை சேர்ந்தவர்களும், தங்கள் சாதி பெருமை பேசும் பாடலை போட்டு எடிட் செய்து வீடியோ வெளியிட்ட வண்ணம் இருந்ததால், சோசியல் மீடியாவில் கடந்த சில தினங்களாக ரத்னவேலு தான் செம்ம டிரெண்டிங்கில் உள்ளார்.
இதையும் படியுங்கள்... 15 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகும் சுப்ரமணியபுரம்... ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த புது வெர்ஷன் டிரைலர் இதோ
நெட்டிசன்களின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தாலும், இந்த டிரெண்டிங் ஓய்ந்தபாடில்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல், நேற்று நடிகர் பகத் பாசில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரத்னவேலு கேரக்டர் புகைப்படங்களை டிபியாக வைத்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பகத் பாசிலுக்கே இது பிடித்திருக்கிறது என குஷியடைந்து மேலும் சில வீடியோக்களை வெளியிட தொடங்கினர்.
பின்னர் ரசிகர்கள் இப்படி தன்னை சாதிய தலைவர் போல் சித்தரித்து வருவதை அறிந்த உடன் தற்போது அதிரடியாக தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து டிபியை நீக்கி உள்ளார். எதுக்குடா வம்புனு அவரே நீக்கினாரா அல்லது மாமன்னன் படக்குழுவினர் அவரை நீக்கச் சொன்னார்களா என்கிற விவரம் இதுவரை வெளியாகவில்லை. சிலரோ பகத் பாசிலின் மனைவி நஸ்ரியா தான் இப்படி டிபியை மாற்றி விளையாடி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஒரு படம் ஹிட் ஆனதும்... தக்காளி விலையை போல் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய சந்தானம் - அதுக்குன்னு இவ்வளவா?