3வது முறையாக கிராமி விருதை தட்டித்தூக்கிய இந்திய இசையமைப்பாளர்... யார் இந்த ரிக்கி கேஜ்?
டிவைன் டைட்ஸ் என்கிற ஆல்பத்திற்காக இந்தியாவை சேர்ந்த இசையமைப்பாளரான ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார்.
இசைக்கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜுக்கும் இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டு உள்ளது.
அவரின் டிவைன் டைட்ஸ் என்கிற ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளார். இது அவர் வெல்லும் மூன்றாவது கிராமி விருது. இதற்கு முன்னர் கடந்த 2015 மற்றும் 2022-ம் ஆண்டு அவர் இந்த விருதை வென்று இருந்தார். கிராமி விருது வென்ற ரிக்கி கேஜுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் ரிக்கி கேஜ்.
அவர் பதிவிட்டுள்ளதாவது : மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. பேச வார்த்தைகள் இல்லை. நான் இந்த விருதை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் ரிக்கி கேஜ். இவர் பெங்களூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ரிக்கி கேஜ்?
3 முறை கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ், பெங்களூருவில் ஏஞ்சல் டஸ்ட் என்ற ராக் இசைக்குழுவின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏஞ்சல் டஸ்ட் இசைக்குழுவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், முழுநேர இசையமைப்பாளராக மாறினார் ரிக்கி கேஜ். அதுமட்டுமின்றி 2003 இல் தனது சொந்த ஸ்டுடியோ, ஒன்றையும் நிறுவினார். இதுவரை 3,000 விளம்பரகள் மற்றும் கன்னட படங்கள் சிலவற்றிற்கும் இசை அமைத்துள்ளார் ரிக்கி கேஜ்.
ரிக்கி கேஜின் படைப்புகள் பல வகைகளில் இருந்தாலும், ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் கர்நாடக இசையின் அடிப்படை சாராம்சத்தை தழுவியே அவரது ஆல்பங்கள் இருக்கும். இதுவரை அவரது மறக்கமுடியாத ஆல்பங்களில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... துணிவு படத்தின் வெற்றியை குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடிய அஜித்... ஷாலினி வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்
சாந்தி ஆர்கெஸ்ட்ரா
ரிக்கி கேஜின் 13வது ஸ்டுடியோ ஆல்பமான சாந்தி ஆர்கெஸ்ட்ரா, கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம் நவம்பர் 2013 இல் ZMR டாப் 100 ரேடியோ ஏர்பிளே தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்தது. அதுமட்டுமின்றி 2013ம் ஆண்டுக்கான ZMR டாப் 100 ஏர்பிளே தரவரிசையில் 37வது இடத்தைப் பிடித்தது.
2 யுனைட் ஆல்
ரிக்கி கேஜ், நன்மைக்காக தயாரித்த ஒரு ஆல்பம் தான் 2 யூனைட் ஆல். இந்த ஆல்பத்தில் பீட்டர் கேப்ரியல் நடித்திருந்தார். இது காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அவசர மனிதாபிமான உதவியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கி இருந்தார் ரிக்கி கேஜ்.
சாந்தி சம்சாரா
சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுக்காக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆல்பம் தான் சாந்தி சம்சாரா. 2015-ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்த ஆல்பம் லான்ச் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிற்கு இந்த ஆல்பத்தின் சிடியை வழங்கினார்.
இதையும் படியுங்கள்... அடி அழகா சிரிச்ச முகமே... 22-வது திருமண நாளில் காதல் மனைவி ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ