அடி அழகா சிரிச்ச முகமே... 22-வது திருமண நாளில் காதல் மனைவி ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

22-வது திருமண நாளை முன்னிட்டு, தனது மனைவியுடன் எடுத்த அழகான புகைப்படங்களை தொகுத்து அதனை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் சரத்குமார்.

Sarathkumar emotional post about radhika on their 22nd wedding anniversary

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத்குமார். ரசிகர்களால் செல்லமாக சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் அவர், கடந்த 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சரத்குமார். திருமணத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன், வாரிசு போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதில் பொன்னியின் செல்வனின் பெரிய பழுவேட்டரையராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் சரத்குமார். அதேபோல் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்து அசத்தி இருந்தார் சரத்குமார்.

மறுபுறம் ராதிகா, சினிமாவிலும், சீரியலிலும் அம்மா வேடங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். கடந்தாண்டு அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை, சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ் டுடே ஆகிய படங்களில் ஹீரோவின் அம்மா கேரக்டரில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ராதிகா.

இதையும் படியுங்கள்... மகளின் திருமணத்தை சைலண்டாக நடத்தி முடித்த கருணாஸ்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Sarathkumar emotional post about radhika on their 22nd wedding anniversary

இப்படி சினிமாவில் தொடர்ந்து சாதித்து வரும் ராதிகா - சரத்குமார் ஜோடி, தங்களது 22-வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடியது. இதற்காக இன்ஸ்டாகிராமில் தங்களது போட்டோக்களை தொகுத்து அதனை ஸ்பெஷல் வீடியோவாக வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் சரத்குமார். 

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது : “22 வருடங்கள், அன்பு, புரிதல், தியாகம், ஒற்றுமை என பல மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்பப் பயணம் இது. இதுவரை வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும் பார்த்திருந்தாலும், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிய வைத்ததற்கு நன்றி. இன்று போல் நாம் எப்போதும் ஒன்றாகவும், நம் அழகான குடும்பத்துடனும் ஒற்றுமையாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... துணிவு படத்தின் வெற்றியை குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடிய அஜித்... ஷாலினி வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios