- Home
- Cinema
- அரசியல்னா எனக்கு என்னன்னே தெரியாது; கண்டிப்பா வரமாட்டேன் - என்ன நடிகர் விஜய் இப்படி சொல்லிருக்காரு!
அரசியல்னா எனக்கு என்னன்னே தெரியாது; கண்டிப்பா வரமாட்டேன் - என்ன நடிகர் விஜய் இப்படி சொல்லிருக்காரு!
நடிகர் விஜய் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்றில் தனக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் கண்டிப்பா அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் பேசி உள்ளார்.

நடிகர் விஜய் தற்போது அரசியலில் நுழைய ஆர்வம் காட்டி வருவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. அதன் வெளிப்பாடாக கடந்தாண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றிகண்டனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்தும் பாராட்டினார். அதேபோல் அண்மையில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அனைத்து மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் விஜய்.
இப்படி விஜய் தற்போது படிப்படியாக தனது அரசியல் நகர்வை முன்னெடுத்து வரும் இந்த வேளையில், அவரின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள், எதிர்காலத்தில் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? என விஜய்யிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தனக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் விஜய் சொல்லுவது மட்டுமின்றி, கண்டிப்பா அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... டைட்டான நீச்சல் உடையணிந்து... கடற்கரையில் திணுசு திணுசா கவர்ச்சி போஸ் கொடுத்து கிக் ஏற்றும் பூனம் பாஜ்வா
அதேபோல் அதில் தன்னை மிகவும் பாதித்த சம்பவம் குறித்தும் மனம்திறந்து பேசி உள்ளார் விஜய். அதன்படி தனது தங்கை வித்யா இறந்தது தான் தன்னை மிகவும் பாதித்த சம்பவம் எனக் கூறிய விஜய், என் தங்கையை புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம் என நெகிழ்ச்சியுடன் கூறினார். அதேபோல் தனக்கு மிகவும் சந்தோஷமான நாள் எது என்பது குறித்து பேசுகையில், தன்னுடைய முதல் படமான நாளைய தீர்ப்பு ரிலீஸ் ஆன 1992-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி தான் என கூறினார்.
இதுதவிர நடிகர் விஜயகாந்த் குறித்தும் அந்த பேட்டியில் விஜய் பேசி உள்ளார். விஜயகாந்த் என்னுடைய சொந்த அண்ணன் மாதிரி என கூறிய விஜய், நான் இப்படி சொல்ற மாதிரி தான் விஜயகாந்தும் எங்கு சென்று பேசினாலும் என்னை சொந்த தம்பி என சொல்வார். இதையடுத்து மீண்டும் விஜயகாந்துடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய், கண்டிப்பா சான்ஸ் கெடச்சதுனா ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என கூறினார். விஜய்யும், விஜயகாந்தும் செந்தூரப்பாண்டி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... என்ன தல பிரியாணியா..! நேபாள ஹோட்டலில் திடீரென குக் ஆக மாறி அஜித் சமைத்த கமகம உணவு - வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.