டைட்டான நீச்சல் உடையணிந்து... கடற்கரையில் திணுசு திணுசா கவர்ச்சி போஸ் கொடுத்து கிக் ஏற்றும் பூனம் பாஜ்வா
கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பூனம் பாஜ்வா, அங்குள்ள கடற்கரையில் நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை பூனம் பாஜ்வா கடந்த 2005-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த இவரை தமிழுக்கு அழைத்து வந்தது இயக்குனர் ஹரி தான். அவர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் பூனம் பாஜ்வா.
சேவல் படத்தின் வெற்றிக்கு பின் பூனம் பாஜ்வாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அடுத்ததாக ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து அசத்தி இருந்தார். பின்னர் சுதா கொங்கரா இயக்கிய துரோகி மற்றும் நரேனுக்கு ஜோடியாக தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார்.
இப்படி தொடர்ந்து இளம் ஹீரோக்களுடனே ஜோடி சேர்ந்து நடித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இதனால் திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய அவருக்கு விஷாலின் ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... குடும்ப குத்துவிளக்காக மாறிய ரம்யா பாண்டியன்! திடுதிப்புனு சென்ற ஆன்மீக பயணம்.. யாருடன் போயிருக்காங்க பாருங்க!
அப்படத்துக்கு பின் சுந்தர் சி உடன் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்த பூனம் பாஜ்வாவுக்கு வயதும் ஏறிக்கொண்டே சென்றதால், அவருக்கான மவுசும் சினிமாவில் குறைந்துவிட்டது. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குருமூர்த்தி. இப்படத்தில் நட்டி நட்ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதன்பின் பட வாய்ப்புகள் இல்லாததால் அப்செட்டில் இருந்துவந்த பூனம் பாஜ்வா, எப்படியாவது பட வாய்ப்புகளை தட்டித்தூக்க வேண்டும் என்கிற முடிவோடு தற்போது போட்டோஷூட் பக்கம் திரும்பி உள்ளார். அதுவும் சாதரணமான போட்டோஷூட் இல்லை. ஆரம்பமே பிகினி போட்டோஷூட் தான்.
கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த பூனம் பாஜ்வா, அங்கு கடற்கரையில் டைட்டான நீச்சல் உடை அணிந்து தொடையழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... என்ன தல பிரியாணியா..! நேபாள ஹோட்டலில் திடீரென குக் ஆக மாறி அஜித் சமைத்த கமகம உணவு - வைரலாகும் வீடியோ