குடும்ப குத்துவிளக்காக மாறிய ரம்யா பாண்டியன்! திடுதிப்புனு சென்ற ஆன்மீக பயணம்.. யாருடன் போயிருக்காங்க பாருங்க!
நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஒரு மாதமாகவே கவர்ச்சி அலப்பறை செய்யும் விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது குடும்ப குத்துவிளக்காக மாறி வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும், நடிகைகள் பட்டியலில் உள்ளவர் தான் ரம்யா பாண்டியன். ஆனால் முன்னணி நடிகைகள் அளவிற்கு ரசிகர்கள் மனதில் ரீச் ஆகிவிட்டார்.
இதற்க்கு முக்கிய காரணம் என்னவென்றால், அடிக்கடி இவர் நடித்த வரும் போட்டோ ஷூட் அலப்பறை தான். கடந்த மாதம் முழுக்க கவர்ச்சி களைகட்டும் புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன் தற்போது அடக்கம்... ஒடுக்கமாக சல்வாரில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பொதுவாக, திரையுலகில் அறிமுகமாகும் ஹீரோயின்கள்... சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயங்குவார்கள். ஆனால், ஜோக்கர் என்கிற வெற்றி படத்தில் நடித்த பின்பு, அதிரடியாக விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பின்னர்பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.
பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த 'விடுதலை' பார்ட் 1 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரம்யா அழகான நடிகை மட்டும் அல்ல, சமயோஜித புத்தியுடன் செயல்படுபவர் என்பதையும் நிரூபித்தார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதால் உறுதியாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி என்கிற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதே போல் கடைசியாக இவர், நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம், மலையாளத்தில் ஓரளவுக்கு வெற்றிபெற்ற போதிலும், தமிழில் படு தோல்வியை சந்தித்தது.
திரையுலகில் அதிர்ச்சி.! பிரபல நடிகருக்கு திடீர் மாரடைப்பு..! கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவல்..!
கடந்த சில மாதங்களாக ரம்யா பாண்டியன் கூடுதல் கவர்ச்சியோடு, ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் உட்பட பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், அவை மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில் திடீர் என குடும்ப குத்துவிளக்காக மாறிய ரம்யா பாண்டியன், சிவப்பு நிற சல்வாரில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது மட்டும் இன்றி, ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதாவது, திடீர் என ரம்யா பாண்டியன், தன்னுடைய சித்தப்பா... அருண் பாண்டியன் ஃபேமிலியுடன் இணைந்து, திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடைய தங்கை, கீர்த்தி பாண்டியன் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.