தனுஷின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு! ஆப்பு வைத்த மாவட்ட ஆட்சியர்! இன்று அனுமதியோடு ஆரம்பமான படப்பிடிப்பு!
'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கடந்த 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உரிய அனுமதி பெற்று, மீண்டும் இன்று முதல் அதே இடத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.
நடிகர் தனுஷ் 'வாத்தி' படத்தின் வெற்றிக்குப் பின்னர், தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. பீரியாடிக் மூவியான இந்த படத்தின் படப்பிடிப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது.
பட குழுவினர் உரிய அனுமதியின்றி, அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்ததாகவும்... மேலும் குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அதனால் எழுந்த சத்தத்தாலும், அதிர்வுகளாலும், அங்கிருந்த மக்கள் பயம் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
திரையுலகில் அதிர்ச்சி.! பிரபல நடிகருக்கு திடீர் மாரடைப்பு..! கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவல்..!
இதனிடையே இந்த படத்தின் சூட்டிங் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் விசாரித்தபோது, உரிய அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், 'கேப்டன் மில்லர்' படத்தை நிறுத்த கோரி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். எனவே 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் உரிய அனுமதியோடு இன்று படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மேலும் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைப்பு வருகிறார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆக்சன் என்டர்டெயினராக உருவாக்கி வரும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.